புளியடி மாரியம்மன் கோயில் புரட்டாசி திருவிழா ; பந்தல்கால் நடப்பட்டது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2024 01:09
சாத்தான்குளம்; சாத்தான்குளம் புளியடி மாரியம்மன் கோயில் புரட்டாசி திருவிழாவிற்கு பந்தல்கால் நடும் விழா நடந்தது. சாத்தான்குளத்தில் இந்து நாடார்உறவின் முறைக்கு பாத்தியப்பட்டபுளியடி தேவி ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் புரட்டாசித் திருவிழா செப்டம்பர் மாதம் 20ம் தேதி துவங்கி 29ம்தேதி வரை10 நாட்கள் நடக்கிறது. இதற்கான பந்தல்கால் நடும் விழா நடந்தது. திருக்கோயில் டிரஸ்ட்டிக் குழுத்தலைவர் மகேஷ்வரன் மற்றும் டிரஸ்ட்டிக் குழுவினர் கலந்து கொண்டனர்.