பதிவு செய்த நாள்
14
செப்
2024
03:09
சிம்மம்: மகம்; மற்றவருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதம். கேது, சூரியன் இருவரும் வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் நிலையில், என்ன நடக்கும்? ஏது நடக்கும்? என்ற கேள்விகள் உங்களுக்குள் எழலாம். இருந்தாலும், குரு பகவானின் பார்வையால்
நடப்பவை எல்லாம் நன்மையிலேயே முடியும். கடந்த மாதத்தின் நெருக்கடி எல்லாம் ஒவ்வொன்றாக விலகும். நினைத்ததை உங்களால் சாதித்துக்கொள்ள முடியும். உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். இருப்பினும், மறைந்த செல்வாக்கு வெளிப்படும். உங்கள் திறமையை உலகம் அறியும். மாதம் முழுவதும் சுக்கிர பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் இதுவரையில் உங்களுக்கு இருந்த பொருளாதார நெருக்கடி விலக ஆரம்பிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னை நீங்கும். கொடுத்த வாக்கை இந்த மாதத்தில் காப்பாற்றுவீர்கள். நிம்மதியாக வாழ்ந்திடக் கூடிய நிலையும் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலகும். மாணவர்கள் படிப்பில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். ஒரு சிலருக்கு புதிய பொருள் சேரும். வம்பு வழக்குகள், எதிர்ப்புகள் என்றிருந்த நிலையெல்லாம் மாற்றம் பெறும். உங்களுடைய எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நினைத்ததை உங்களால் சாதித்துக் கொள்ளக்கூடிய மாதமாக இருக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் பொறுப்பு அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் கூடுதலாக கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகம் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். தொழிலாளர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் தோன்றும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் உண்டாகும். விவசாயிகளுக்கு இந்த மாதம் ஆதாயமான மாதமாக இருக்கும்.
சந்திராஷ்டமம்: செப். 18, 19. அக். 15, 16.
அதிர்ஷ்ட நாள்: செப். 25, 28. அக். 1, 7, 10.
பரிகாரம்: பிள்ளையார்பட்டி விநாயகரை வழிபட உங்கள் வாழ்வில் நன்மை உண்டாகும்.
பூரம்: சாதிப்பதில் திறமையும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் முன்னேற்றமான மாதம். நட்சத்திர நாதன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் மேற்கொள்ளும் வேலை ஒவ்வொன்றாக நடைபெற ஆரம்பிக்கும். எதிர்பார்த்த வரவு வரும். வியாபாரத்தில் இருந்த தடை விலக ஆரம்பிக்கும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடித்துக் கொள்ளும் ஆற்றல் பிறக்கும். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். எதிர்பாலினர் உங்கள் செயல்களுக்கு உதவியாக இருப்பர். உத்தியோகம் பார்க்கும் இடத்தில் ஏற்பட்டு வந்த நெருக்கடி விலகும். உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். சாதுரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். பொருளாதார நெருக்கடி விலகும். வாக்கு ஸ்தானத்தில் ராசிநாதன் சூரியன் கேதுவுடன் இணைந்து சஞ்சரிப்பதால் பண விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. எதிலும் அவசரம் என்பது வேண்டாம். அது சில படிப்பினைகளுக்கு வழிவகுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாகவும், நேர்மையாகவும் செயல்படுவதால் நன்மை அடைய முடியும். இல்லையெனில், அரசு வழியில் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். இந்த நேரத்தில் குரு பகவானின் பார்வையால் பண வரவிற்கு குறைவிருக்காது. வம்பு வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். தாய் வழி உறவுகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். புதிய வீடு கட்டும் முயற்சியில் ஒரு சிலர் இறங்குவீர். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருப்பது அவசியம். பெண்கள் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதால் நன்மை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: செப். 19. அக். 16, 17.
அதிர்ஷ்ட நாள்: செப். 24, 28. அக். 1, 6, 10, 15.
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
உத்திரம் 1 ம் பாதம்: திறம்பட செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நீங்கள் நினைப்பது நிறைவேறும் மாதம். செவ்வாய் பகவான் மாதம் முழுவதும் எதிர்பார்த்த வருவாய், முன்னேற்றம் என்பதெல்லாம் இந்த மாதத்தில் தர இருக்கிறார். கடந்த மாத நெருக்கடி விலகும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், மருத்துவம், காவல்துறை, ஹோட்டல், விவசாயம், மெடிக்கல் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு யோகமான மாதம். தடைபட்ட வேலை நடக்கும். பொருளாதார நெருக்கடி நீங்கும். வேலைப் பார்த்து வரும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குரு பகவானின் பார்வை மங்கலத்தை உண்டு பண்ணும். நினைத்த வேலைகளை நினைத்தபடி உங்களால் நடத்திக் கொள்ள முடியும். பணவரவில் இருந்த தடை விலக ஆரம்பிக்கும். வர வேண்டிய பணம் வரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியில் முடியும். உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னை நீங்கும். வியாபாரம் தொழிலில் இருந்த போட்டி, எதிர்ப்பு விலகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதலாக அக்கறை செலுத்துவது நல்லது. தொழிலாளர்களுக்கு இந்த மாதம் முன்னேற்றமான மாதம். வரவு அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: செப். 20. அக். 17.
அதிர்ஷ்ட நாள்: செப். 19, 28. அக். 1, 10.
பரிகாரம் அதிகாலையில் சூரிய பகவானை வழிபட வாழ்வில் வளம் கூடும்.