பதிவு செய்த நாள்
14
செப்
2024
03:09
கன்னி: உத்திரம் 2, 3, 4 ம் பாதம்; துணிச்சலாக செயல்பட்டு வெற்றியடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் சிறப்பான மாதம். உங்கள் ஜென்ம ராசிக்குள் கேதுவும், சூரியனும் இணைந்திருந்திருப்பதால் முன்னோர் வழிபாடு திருப்தி தரும். முயற்சி வெற்றியாகும். ராகுவினால் நண்பர்களின் சுயரூபம் தெரியும். கூட்டுத் தொழிலில் கவனமாக இருப்பது நல்லது. வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வதால் குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். குரு பகவானின் 5 ம் பார்வை உங்கள் ராசிக்கு இருப்பதால் எந்தவிதமான சங்கடம் உங்களுக்கு வந்தாலும் அவை வந்த வழி தெரியாமல் போய்விடும். உங்கள் செல்வாக்கு, அந்தஸ்து எல்லாம் உயரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தம்பதிக்குள் இருந்த பிரச்னை விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். தடைபட்டு வந்த வேலை ஒவ்வொன்றாக நடைபெறும். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் உங்களுடைய தொழில் ரகசியங்கள் எதையும் அவர்களுக்கு தெரிவிக்க வேண்டாம். மாதம் முழுவதும் சுக்கிரனும், புதனும் சாதகமாக சஞ்சரிப்பதால் வருமானம் உயரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: செப். 20.
அதிர்ஷ்ட நாள்: செப். 19, 23, 28. அக். 1, 5, 10, 14.
பரிகாரம்: ஆட்சிபுரீஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
அஸ்தம்: நினைத்ததை சாதித்துக் கொள்ளும் திறமை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதம். குரு பகவானின் பார்வை வாழ்க்கையில் இருந்த சங்கடங்களை இல்லாமல் செய்யும். திறமை இப்போது வெளிப்படும். உங்களை அலட்சியம் செய்தவர்கள் திரும்பிப் பார்த்திடும் வகையில் நிலை உயரும். செல்வாக்கு, அந்தஸ்து எல்லாம் அதிகரிக்கத் தொடங்கும். எதிர்பார்த்து வந்த தகவல் வரும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலக ஆரம்பிக்கும். உங்களுடைய கோரிக்கை நிறைவேறும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதர வழியில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். குழந்தை பாக்கியத்திற்காக நீண்ட நாட்களாக முயற்சித்து வந்தவர்களுக்கு தெய்வ அருளால் நல்ல தகவல் கிடைக்கும். ராசிநாதன் புதன், மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய இடம் வாங்குவது, ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது, கேட்டிருந்த இடத்திலிருந்து பணம் பெறுவது என்பதெல்லாம் இந்த மாதத்தில் நடந்தேறும். யாரையும் நம்பி எந்தவொரு பொறுப்பையும் இந்த மாதத்தில் ஒப்படைக்க வேண்டாம். வேலைப்பற்றிய சிந்தனை எப்பொழுதும் உங்களுக்குள் இருக்கும். ஒரு உந்து சக்தியாக இருந்து சூரியன் உங்களைச் செயல்பட வைப்பார். அதனால், ஓய்வு உறக்கம் என்பதை எல்லாம் மறந்து செயல்பட்டு முன்னேற்றத்தை அடையக்கூடிய நிலையும் ஒரு சிலருக்கு உண்டாகும். பொதுவாக இந்த மாதம் உங்கள் வாழ்க்கையில் ஒரு பொன்னான மாதம். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கு மரியாதை அதிகரிக்கும். விவசாயிகள் தொழிலாளர்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும்.
சந்திராஷ்டமம்: செப். 20, 21.
அதிர்ஷ்ட நாள்: செப். 20, 23, 29. அக். 2, 5, 11, 14.
பரிகாரம்: சொர்ணபுரீசுவரரை வழிபட வாழ்வில் வளமுண்டாகும்.
சித்திரை 1, 2 ம் பாதம்: மன உறுதியுடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் யோகமான மாதம். உங்கள் ராசிநாதனால் நினைத்ததை சாதித்துக் கொள்ள முடியும். வெளியூர் பயணம் லாபம் தரும். மற்றவரால் பாராட்டப்படுவீர்கள். சுக்கிரனின் சஞ்சாரம் இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் வருமானம் உயரும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவிக்குள் இருந்த நெருக்கடி விலகும். சில வேலைகளில் ஈடுபட்டு அதனால் நெருக்கடிக்கு ஆளாக வேண்டிய நிலை வரும். கவனம் தேவை. பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம். புதிய முதலீடு செய்வதற்குமுன் பலமுறை நன்றாக யோசித்து அதன் பிறகு செய்வது நல்லது. குரு பகவானின் பார்வை உங்களின் தடைகளை தவிடுபொடியாக்கும். இதனால் உங்களுடைய செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். புதிய சொத்து வாங்க வேண்டும் என்ற எண்ணம் இப்போது நிறைவேறும். தடைபட்ட வேலை நடக்கும். உறவுகள் உங்களைத் தேடிவரும் நிலை உண்டாகும்.ராகுவால் நன்மை அதிகரிக்கும். புதிய நட்புகளிடம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். எதிர்பாலினர் விஷயத்தில் ஓரடி தள்ளியே இருப்பது உங்களுக்கு நன்மையை உண்டாக்கும். வழக்கமான வேலைகள் எல்லாம் உங்களுக்கு லாபத்தை உண்டாக்கும் என்பதால் அதில் மட்டும் கவனத்தை செலுத்துவதும், உத்தியோகத்தில் கவனமாக இருப்பதும் நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடை விலகும்.
சந்திராஷ்டமம்: செப். 22.
அதிர்ஷ்ட நாள்: செப். 18, 23, 27. அக். 5, 9, 14.
பரிகாரம்: சொர்ண காளீஸ்வரரை வழிபட வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்.