பதிவு செய்த நாள்
14
செப்
2024
03:09
துலாம்: சித்திரை 3, 4 ம் பாதம்; முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் சிறப்பான மாதம். மாதம் முழுவதும் உங்களுக்கு ராசிநாதன் ஆதாயத்தை வழங்குகிறார். அதனால், பொருளாதார நெருக்கடி விலகும். தொழிலில் இருந்த தடை விலகி முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் லாபத்தை எட்டும். பழைய கடன்கள் அடைபடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலகும். செல்வாக்கு உயரும். மறைமுகமாக தொல்லைகள் கொடுத்தவர்கள் விலகிச் செல்வர். சூரியன், கேது, குரு பகவானின் பார்வையால் எல்லாம் சுபமாகும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. எந்த ஒன்றிலும் இக்காலத்தில் அவசரம் காட்ட வேண்டாம். இடம் வாங்குவது, விற்பது போன்ற விவகாரங்களில் விழிப்புடன் செயல்பட வேண்டும். விவசாயிகள் தங்கள் வேலையில் முழுமையான அக்கறை செலுத்தி வருவது நல்லது. மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அரசியல்வாதிகளுக்கு இந்த மாதம் நிதானம் தேவை. தலைமையை அனுசரித்துச் செல்வது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாக காரணங்களால் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். நேரம், காலம், சூழ்நிலை அறிந்து செயல்படுவதும் பிறரை அனுசரித்துச் செல்வதின் வழியாகவும் எதிர்பார்த்த நன்மைகளை அடைய முடியும்.குடும்பத்தில் குழப்பம் குறைந்து மனநிறைவு ஏற்படும்.
சந்திராஷ்டமம்: செப். 22.
அதிர்ஷ்ட நாள்: செப். 18, 24, 27. அக். 6, 9, 15.
பரிகாரம்: சொர்ணாகர்ஷன பைரவரை வழிபட சங்கடம் விலகும்.
சுவாதி: நினைத்ததை அடையும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் மாதம் புரட்டாசி மாதம் யோகமான மாதம். உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். சுறுசுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். மறைமுகத் தொல்லை நீங்கும். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் சாதகமாகும். சமூகத்தில் தனி அந்தஸ்தும் செல்வாக்கும் உண்டாகும். உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் சுக்கிரன் வழங்குவார். வாழ்க்கைத்துணையுடன் இணக்கம் உண்டாகும். புதிய சொத்து சேர்க்கையும், பொன் பொருளும் சேரும். ஒரு சிலர் இருக்கும் வாகனத்தை விற்றுவிட்டு வேறு வசதியான வாகனம் வாங்குவீர். அரசு விவகாரங்களில் வியாபாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேறு வித ஆசைகளுக்கும் வருமானத்திற்கும் இந்த நேரத்தில் இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது. அரசாங்கத்தின் கழுகுப் பார்வை இந்த நேரத்தில் உங்கள் மீது இருக்கும். ஒரு சிலருக்கு குடும்பத்தில் சுபச்செலவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பாக்ய ஸ்தான செவ்வாயால் விவசாயத்திலிருந்த குளறுபடி விலகும். லாபம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலை இப்பொழுது முடிவிற்கு வரும். விரும்பிய இடத்தை வாங்குவதற்கு வாய்ப்பு வரும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியதாக இருக்கும். குரு பகவானின் பார்வை தன ஸ்தானத்திற்கு உண்டாவதால் செலவுகளை சமாளித்திடக்கூடிய அளவிற்கு வரவு வரும். அரசியல்வாதிகள் இக்காலத்தில் தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: செப். 23.
அதிர்ஷ்ட நாள்: செப். 22, 24. அக். 4, 6, 13, 15.
பரிகாரம்: பிரத்தியங்கிராவை வழிபட்டு வர வாழ்வில் வளம் உண்டாகும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதம் : செயல்களில் நிதானமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் அதிர்ஷ்டமான மாதம். குருப் பார்வையால் விரய செலவு கட்டுப்படும். நெருக்கடி நீங்கும். வாழ்வில் இருந்த பயம் போகும். நீங்கள் செலவு செய்யும் பணம் ஒவ்வொன்றும் ஆதாயமானதாகவும், அத்தியாவசியமானதாகவும் இருக்கும். குருவினால் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். உடல்நிலை சீராகும். நினைத்ததை சாதித்திடக்கூடிய நிலை உண்டாகும். ராகுவின் அருளால் தொட்டதெல்லாம் வெற்றி ஏற்படும். இருந்தாலும், வியாபாரிகள் திட்டமிட்டு செயல்பட வேண்டும். கணக்கு வழக்குகளில் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் கடமையில் சரியாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் அவசரத்தினால் இடம் கொடுக்காமல் ஒவ்வொரு வேலையையும் யோசித்து செயல்பட வேண்டும். இந்த நேரத்தில் யாரையும் பகைத்துக் கொள்வது நன்மையாக இருக்காது என்பதை மனதில் கொள்ள வேண்டும். குடும்பத்தில், வாழ்க்கைத் துணையுடன் இருந்த சங்கடம் விலகும். பிரச்னை நீங்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். புதிய வாகனம் வாங்குவீர். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். விவசாயி அக்கறையுடன் செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: செப். 24.
அதிர்ஷ்ட நாள்: செப். 21, 30. அக். 3, 6, 12, 15.
பரிகாரம்: உலகளந்தப் பெருமாளை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.