திருப்பதியில் 365 நாட்களில் 450 உற்சவங்கள்; மனதில் சிலிர்ப்பை தரும் பெருமாள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2024 10:09
வெங்கடாசலபதி குடிகொண்டுள்ள திருமலைக்கு கீழ்திருப்பதியிலிருந்து ஏழு மலைகளை கடந்து செல்ல வேண்டும். இந்தியாவிலேயே அதிக வருமானம் உள்ள கோயில். முடி காணிக்கை மூலம் மட்டுமே பல கோடிகளை சம்பாதிக்கும் தலம். புரட்டாசி சனி விரதம் இந்தப்பெருமாளை முன்னிட்டே அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தியாவில் மிக அதிகமான மக்கள் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.
புரட்டாசி பிரமோற்ஸவத்தின் ஐந்தாம் திருநாளில் கருட சேவை நடக்கும். அன்று சுவாமி பவனியின் போது மூலவரே வெளியில் வருவதாக ஐதீகம். இதன் காரணமாக ஒரு காலத்தில் சுவாமி பவனி முடியும் வரை கோயில் நடை அடைக்கப்பட்டது. தற்போது கூட்டம் அதிகமாக இருப்பதால், பெயரளவுக்கு ஐந்து நிமிடங்கள் மட்டும் நடை அடைக்கப்படுகிறது. இந்த விழாவின் போது ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடுகிறார்கள்.பொதுவாக பெருமாளை பசுக்களை மேய்க்கும் கோலத்தில் தான் பார்த்திருப்பீர்கள். ஆனால் திருப்பதியில் உற்சவப் பெருமாள் மட்டுமே "ஆடு மேய்க்கும் கோலத்தில் காட்சியளிப்பார். இந்த காட்சியை ஊஞ்சல் உற்சவத்தின் போது தரிசிக்கலாம். வருடத்தின் 365 நாட்களில் 450 திருவிழாக்களும், உற்சவங்களும் இவரை தவிர வேறு எந்த தெய்வத்துக்கும் நடைபெறுவதில்லை. திருப்பதி என்றாலே அதில் எண்ணற்ற அதிசயங்கள் அடங்கியுள்ளது. திருப்பதி பெருமாளை தரிசிப்பதே நம் மனதில் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழியும் பெருமாளை வழிபடுவோம்.