கூடலுார்; மேலக்கூடலூர் மந்தையம்மன் கோயில் திருவிழா கோலாகலமாக நடந்தது.
அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிறப்பு வழிபாடு தீபாராதனை நடந்தது. பெண்கள் அதிகாலையில் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். மாலையில் சுவாமி வேடங்கள் அணிந்து வாகனங்களில் பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். முன்னதாக கபடி போட்டி, சைக்கிள் போட்டி, மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முளைப்பாரி மாவிளக்கு எடுத்த பக்தர்களுக்கு ஹிந்து முன்னணி நகர பொதுச்செயலாளர் ஜெகன் பரிசு வழங்கினார். கரகாட்டம், தேவராட்டம், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.