Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம் : ஐப்பசி ராசி பலன் தனுசு : ஐப்பசி ராசி பலன் தனுசு : ஐப்பசி ராசி பலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
விருச்சிகம் : ஐப்பசி ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருச்சிகம் : ஐப்பசி ராசி பலன்

பதிவு செய்த நாள்

15 அக்
2024
05:10

விருச்சிகம்: விசாகம் 4 ம் பாதம்.. நினைத்ததை சாதிக்கும் வலிமை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம்.  உங்கள் நட்சத்திர நாதன் வக்ரம் பெற்றிருப்பதால் இதுவரை அவரால் கிடைத்த நற்பலன் கிடைக்காமல் போகும். சுலபமான வேலை கூட இப்போது இழுபறி ஆகும். எதிரிகள், வியாபார போட்டியாளர் கை மேலோங்கும். உங்கள் வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும். பிறரை நம்பி எந்தவொரு வேலையினையும் வழங்க வேண்டும். சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எல்லாவற்றிலுமே ஒருவித நெருக்கடி இருக்கும். வரவை விட செலவு அதிகரிக்கும். அரசு வழியில் சிலர் அபராதம் கட்ட நேரும். கவனமாகவும் நேர்மையாகவும் செயல்பட்டால் மட்டும்தான் அனைத்தையும்  சமாளிக்க முடியும். அனைத்து விவகாரங்களிலும் எச்சரிக்கை தேவை. உத்யோகத்தில் இருப்பவர்கள் வேலை பளுவிற்கு ஆளாவர். வரவேண்டிய பணம் இழுபறியாகும். எதிர்பார்த்த விவகாரம் தள்ளிப் போகும். என்றாலும், இந்த நேரத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உங்களைப் பாதுகாப்பார். நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுப்பார். நன்மைகளை அதிகரிப்பார். தெய்வ சிந்தனையும், கோயில் வழிபாடும் இந்த மாதத்தில் உங்களைப் பாதுகாக்கும். விவசாயிகள் விளைச்சலில் கவனம் செலுத்த வேண்டும். பணியாளர் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். மாணவர்களுக்கு அக் 25 முதல் படிப்பில் அக்கறை கூடும்.

சந்திராஷ்டமம்: அக் 22

அதிர்ஷ்ட நாள்: அக் 18, 21, 27, 30. நவ 3, 9, 12.

பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.


அனுஷம்:  நீதி நேர்மை நியாயம் என அனைத்திலும் யோசித்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சவாலான மாதம். சுக்கிரனால் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். என்றாலும், செயல்பாட்டில் நெருக்கடி ஏற்படும். நவ 4 முதல் உங்கள் நட்சத்திரநாதன் வக்ர நிவர்த்தி அடைவதுடன் அவருடைய 10 ம் பார்வையால் உங்கள் ராசியையும் பார்க்கிறார். அதன் காரணமாக உடல் நிலையில் எதிர்பாராத சங்கடம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதால் கவனமாக செயல்படுவது மட்டுமே இக்காலத்தில் சங்கடங்களில் இருந்து  விடுபட முடியும். அரசு வழி விவகாரம் இழுபறியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். ஒரு சிலருக்கு வெளியூர் மாற்றம் உண்டாகும். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோர் பிறரை அனுசரித்துச் சென்று செயல்படுவது அவசியம். தேவையற்ற சங்கடங்களும் நெருக்கடிகளும் இக்காலத்தில் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த நேரத்தில் வாழ்க்கைத் துணையின் ஆதரவு மட்டுமே உங்கள் பலமாக இருக்கும். விவசாயிகள் கவனமாக செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் படிப்பில் கவனம் சிதறும் பிற்பகுதி யோகமாக இருக்கும்.

சந்திராஷ்டமம்: அக் 22, 23.

அதிர்ஷ்ட நாள்: அக் 18, 26, 27. நவ 8, 9, 

பரிகாரம்: சனீஸ்வர வழிபாட்டால் சங்கடம் நீங்கும்.


கேட்டை:  எளிதில் வெற்றிபெறும் சக்தி கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் உழைப்பால் முன்னேற்றம் அடையும் மாதம். எதிர்பாராத செலவுகள் தோன்றும். ராசிநாதன் மாதத்தின் முற்பகுதியில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எந்த ஒன்றிலும் போராடி வெற்றிபெற வேண்டிய நிலை உண்டாகும். உறவுகள் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்குவர். எதிர்பார்த்த பணம் வருவதில் இழுபறியாகும். வரவேண்டிய ஒப்பந்தம் தள்ளிப்போகும். அரசு வழி முயற்சிகளில் தடையும் தாமதமும் ஏற்படும். சுக ஸ்தானமான 4 ம் இடத்தில் சஞ்சரித்து வரும் சனி பகவான் நவ 4 முதல் வக்ர நிவர்த்தி அடைவதால், உடல் நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். வெளியூர் பயணங்களில் எச்சரிக்கை அவசியம். இதுவரை சுமூகமாக சென்று கொண்டிருந்த ஒவ்வொரு வேலையும் இப்போது நெருக்கடியை உண்டாக்கும். மனம் குழப்பம் அடையும். கேது வியாபாரம் தொழிலில் இருந்த நெருக்கடிகளை நீக்கி லாபத்தை வழங்குவார். ஜென்ம ராசிக்குள்ளும், தன ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் சுக்கிர பகவான் உங்கள் நிலையை உயர்த்துவார். வரவை அதிகரிப்பார். சந்தோஷத்திற்கு ஆளாக்குவார். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் அதை சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதால் மனம் தெளிவடையும். ஐந்தாம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால் பிள்ளைகள் நலனில் இக்காலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருவது நல்லது. மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது அவசியம்.

சந்திராஷ்டமம்: அக் 23, 24.

அதிர்ஷ்ட நாள்: அக் 18, 27. நவ 5, 9, 14.

பரிகாரம்: பைரவரை வழிபட பயம் போகும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar