கோவை ; வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு புரட்டாசி பிரதோஷ பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு பால், இளநீர், மஞ்சள், பன்னீர், திருநீறு உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து காசிவிஸ்வநாதர் ரிசப வாகனத்தில் தேவியருடன் எழுந்தருளி கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டனர்.