Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 30. சிம்ஹக்ன மூர்த்தி 32. தட்சிணாமூர்த்தி 32. தட்சிணாமூர்த்தி
முதல் பக்கம் » 64 சிவ வடிவங்கள்
31. சண்டேச அனுக்கிரக மூர்த்தி
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 ஜன
2011
04:01

திருசேய்ஞலூரில் வாழ்ந்து வந்தான் யஜ்ஞதத்தன். அவன் மனைவி பத்திரை. இவர்களது மகனாக விசாரசருமர் என்பவன் இருந்தான். விசாரசருமர் பிறக்கும்போதே முன்ஜென்ம அறிவின் பயனாக நல்லறிவுடன் பிறந்தான். யாரிடமும் வேதம் பயிலாமல் தானே உணரும் அறிவைப் பெற்றிருந்தான். ஏழுவயதில் அவருக்கு <உபநயனம் செய்தனர். எந்த ஆசிரியரிடமும் கற்காமல் தானே அனைத்தையும் <உணர்ந்து வேதாகம சொற்படி வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஐந்தொழில்கள் செய்து எம்மை வழிநடத்த உரியவர் சிவபெருமான் ஒருவரே என தீர்மானமாக நம்பியிருந்தான். அவ்வாறிருக்கையில் அவனுடன் இருக்கும் ஒரு அந்தணச் சிறுவன் பசுவை அடிப்பதைக்கண்டான் விசாரசருமர். உடன் பசு மேய்க்கும் வேலையை அவனே செய்யலானான். கோமாதாவின் அருமை பெருமைகளை <உணர்ந்ததால் அத்தொழிலைச் சிறப்பாகச் செய்தான். சரியான முறையில் அவற்றை அன்புடன் பராமரித்தான். அதனால் அவை முன்பை விட அதிகளவில் பால் கொடுத்தது. இதற்கிடையே அங்குள்ள மண்ணி ஆற்றங்கரையின் மணல்மேட்டில் உள்ள அத்திமரத்தின் கீழே மணலிங்கம் செய்து கோயில், கோபுரம், மதில் போன்றவற்றை மணலாலே அமைத்து சிவபெருமானுக்கு பூஜைசெய்து பாலபிசேகம் செய்து வழிபட்டு வந்தார். இதனையே தினசரி வாடிக்கையாக்கினார். இதனைக் கண்டோர் ஊர் பெரியோரிடம் முறையிட ஊர் பெரியோர் விசாரசருமனின் தந்தையிடம் முறையிட்டனர். விசாரசருமரின் தந்தை இனி தான் பார்த்துக் கொள்வதாகக் கூறினார், மறுநாள் அதிகாலை விசாரசருமர் ஆற்றங்கரைக்கு சென்று பூஜித்து பாலபிசேகம் செய்துக் கொண்டிருக்கும் போது அவரது தந்தையார் கண்டு விசாரசருமரின் முதுகில் ஓங்கி அடிவைத்தார். அடியின் வலி உணராமல் சிவபூஜையிலேயே விசாரசருமர் ஈடுபட்டிருந்தார் அதிக கோபமுற்ற தந்தையார் பால் குடங்களை <உதைத்துத் தள்ளினார். இதன்பின்னே சுயநினைவு வரப்பெற்ற விசாரசருமர் தந்தையென்னும் பாராமல் அங்கிருந்த ஒரு கொம்பை எடுத்தார். அது மழுவாக மாறியது. உடன் தந்தையாரின் காலை வெட்டினார். உடனே தம்பதி சமேதராய் சிவபெருமான் அங்கு காட்சிக்கொடுத்தார். பின் என்னுடைய தொண்டர்கள் அனைவருக்கும் உன்னைத் தலைவாக்கினோம் மேலும் என்னுடைய அமுதம், மலர்கள், பரிவட்டம் என அனைத்தும் உனக்கே தந்தோம் என்றபடியே தனது சடாமுடியில் இருந்த கொன்றை மாலையை விசாரசருமருக்கு சூட்டி அவருக்கு சண்டேச பதவியை அளித்தார். விசாரசருமருக்கு சண்டேச பதவியை அனுகிரகித்ததால் சிவபெருமானுக்கு "சண்டேச அனுக்கிரக மூர்த்தி என்றப் பெயர் ஏற்பட்டது.

கும்பகோணம் சேய்ஞலூர் ரோட்டைத் தாண்டி அமைந்துள்ள ஊர் "திருவாய்ப்பாடி ஆகும். இவரது பெயர் பாலுகந்தமூர்த்தி, இறைவி பெயர் பெரியநாயகி என்பதாகும். சண்டேசப் பதவியை அளிக்கும் வல்லமை இவர் ஒருவருக்கே உண்டு. சண்டேஸ்வரனை வணங்கினால்தான் சிவ வழிபாடே முழுமையடையும். இவரை வணங்க மனம் ஒருமைப்படும். வில்வார்ச்சனையும் வெண்சாத நைவேத்தியமும் பிரதோஷம், சோமவாரங்களில் கொடுக்க நல்லறிவு, நல்லெண்ணம் வெளிவரும். மேலும் இம்மூர்த்தியை பஞ்சகவ்யம் கொண்டு வழிபட ஆன்மாவானது தூய்மையடையும்.

 
மேலும் 64 சிவ வடிவங்கள் »
temple news

1.லிங்கமூர்த்தி நவம்பர் 02,2010

லிங்கம் விளக்கம்: நம்முடைய புராணங்களும், வேதங்களும் பரசிவத்தை கீழ்கண்டவாறு விவரிக்கின்றது. மெய், வாய், ... மேலும்
 
temple news
நான்முகனுக்கு  இரண்டாயிரம்  சதுர்யுகம் ஒரு நாளாக உள்ளது. ஒருமுறை நாள் கணக்கு முடிந்து உறங்க  ... மேலும்
 
temple news
சிவலிங்கத்திற்கென தனியானதொரு கீர்த்தி உண்டு எனலாம். சிவலிங்கத்தில் முகம் இருந்தால்  நாம் அதை ... மேலும்
 
temple news
சடாமுடியிடன் காட்சியளிக்கும் இவர் ஐந்து திருமுகங்களைக் கொண்டவர் ஆவார். தலைக்கு இரண்டாக பத்துக் ... மேலும்
 
temple news
இவர் கைலாயத்தில் இருப்பவர். இவர் இருபத்தி ஐந்து தலைகளும், ஐம்பது கைகளையும் கொண்டவர். எனவே இவரை நாம் மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar