இன்று ரமா ஏகாதசி விரதம்; விஷ்ணுவை வழிபட வாழ்வில் மேன்மை கிடைக்கும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2024 10:11
கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசிக்கு ரமா ஏகாதசி என்று பெயர். ஒருவர்க்கு மட்டுமின்றி, ஊருக்கே, உலகுக்கே வளமையருளும் நாள் இது. இன்று விரதம் இருந்து பெருமாளுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடுதல் சிறப்பு. கயிலைநாதனான சிவபெருமான், ஒருமுறை பார்வதிதேவிக்கு ஏகாதசி விரதமகிமையை எடுத்துச் சொன்னார். பார்வதி! ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்றார். உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத் தூய்மை, உடலின் அகத்தூய்மை முதலிய பல நன்மைகள் உண்டாகின்றன. எனவே, அனைத்து ஏகாதசிகளிலும் பலர் விரதம் இருக்கின்றனர். இன்று பெருமாளை வழிபட்டு மகாவிஷ்ணுவின் கருணையைப் பெறுவோம்..!