புல்மேடு வழியாக 10 நாட்களில் 6598 பக்தர்கள் நடந்து சென்று சபரிமலையில் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27நவ 2024 11:11
கூடலுார்; சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கடந்த 10 நாட்களில் சத்திரம், புல்மேடு காட்டுப்பாதை வழியாக 6598 பக்தர்கள் நடந்து சென்று தரிசனம் செய்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல எருமேலி பம்பை வழியாக ஒரு பாதையும், சத்திரம் புல்மேடு வழியாக மற்றொரு பாதையும் உள்ளது. இதில் குமுளியில் இருந்து பம்பை வழியாக சென்றால் 140 கி.மீ.,க்கு மேல் பயணம் செய்ய வேண்டும். ஆனால் சத்திரம் புல்மேடு வழியாக சென்றால் 40 கி.மீ.,ல் கோயிலை அடைந்து விடலாம். இதனால் ஏராளமான பக்தர்கள் இவ்வழியே செல்ல ஆர்வம் காட்டியுள்ளனர். சத்திரம் வரை வாகனத்தில் சென்று அங்கிருந்து புல்மேடு வழியாக 12 கி.மீ., தூரம் காட்டுப்பாதையில் நடந்த செல்ல வேண்டும். சத்திரத்தில் ஸ்பாட் புக்கிங் வசதி உள்ளது. மேலும் நடந்து செல்லும் காட்டுப்பாதையில் வனத்துறை சார்பில் குடிநீர் மற்றும் அவசர சேவை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் 6598 பக்தர்கள் இவ்வழியே நடந்து சென்று தரிசனம் செய்துள்ளதாக வனத்துறை தரப்பில் கூறப்பட்டது. மண்டல பூஜை மற்றும் மகர ஜோதி நாட்களுக்கு முன்பு இல்வழியே செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால் கூடுதல் வசதிகள் செய்வது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.