கோவை; ராம்நகர் கோதண்டராமர் கோவிலில், நேற்று மாலை ஹரிஹரபுரம் ஸ்ரீமடம் ஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மஹாஸ்வாமிகள் தலைமையில், ஸ்ரீ சக்ரநவாவர்ண பூஜை நடந்தது.
கர்நாடக மாநிலம் ஹரிஹரபுரம் சிக்மகளூர் ஸ்ரீமடம் ஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மஹாஸ்வாமிகள், நேற்று கோவைக்கு வருகை தந்தார். ராம்நகர் கோதண்ட ராமர் கோவிலில், பக்தர்கள் சார்பில் சுவாமிகளுக்கு மங்களவாத்தியங்கள் முழங்க, பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அவரது தலைமையில் மாலை 6:30 மணிக்கு, ஸ்ரீ சக்ரநவாவர்ண பூஜை நடந்தது. அப்போது மங்களவாத்தியங்கள் முழங்க, வேதமந்திரங்கள் பாராயணம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை 10:30 முதல் மதியம் 12:30 மணி வரை, துர்கா சந்திரகலா ஸ்துதி மற்றும் அபிராமி அந்தாதியை, லட்சுமி மஹாதேவன் குழுவினர் பாராயணம் செய்கின்றனர். மாலை 6:30 மணிக்கு, ஸ்ரீ சக்ரநவாவர்ண பூஜை நடக்கிறது. நாளை காலை 10:30 முதல் 12:30 மணி வரை, ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பாராயணம் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமிகளின் அனுக்கிரஹ பாஷனமும், மாலை 6:30 மணிக்கு ஸ்ரீ சக்கர நவாவர்ண பூஜையும்நடக்கிறது.