பம்பையில் கூடுதல் பார்க்கிங் வசதி அரவணைக்கு புதிய பிளான்ட்; தேவசம் போர்டு தகவல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10டிச 2024 04:12
சபரிமலை; சபரிமலையில் நடப்பு சீசனில் அரவணை பிரசாதத்திற்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும் புதிய அரவணை பிளான்ட் அடுத்த சீசனில் தொடங்கப்படும் என்றும் பம்பையில் கூடுதல் வாகனங்களுக்கு பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி. எஸ். பிரசாந்த் கூறினார்.
கடந்த ஆண்டு மண்டல மகர விளக்கு சீசனில் ஏற்பட்டது போல இந்த சீசனில் பிரசாதத்துக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது. நடப்பு சீசன் தொடங்கும் போது 40 லட்சம் பின் அரவணை ஸ்டாக் வைக்கப்பட்டது. அதில் 25 லட்சம் அரவணை தற்போது ஸ்டாக் உள்ளது. தினமும் 2.50 முதல் 2.80 லட்சம் டின் அரவணை உற்பத்தி செய்யப்படுகிறது . தற்போதைய அரவணை உற்பத்தி மற்றும் பேக்கிங் முழுக்க முழுக்க இயந்திர மயமாகப்பட்டுள்ளது.இனி கூடுதலாக 2 லட்சம் டின் உற்பத்தி திறன் கொண்ட மற்றொரு அரவணை பிளான்ட் கூட அமைப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு வரும்போது பக்தர்களின் தேவைக்கு ஏற்ப அரவணை பிரசாதம் வழங்க முடியும். அடுத்த சீசனில் இதை திறக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போது திடப்பள்ளி அருகே அமைந்துள்ளார் அரவணை பிளான்டுடன் சேர்ந்து புதிய பிளான்ட் அமைக்கப்படும். மண்டல மகர விளக்கு சீசனில் தினசரி 3.50 லட்சம் டின் அரவணை தேவைப்படுகிறது. புதிய பிளான்ட் வரும்போது இவை உடனுக்குடன் தயாரித்து வழங்க இயலும். பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை ஐயப்பனுக்கு நிவேத்யம் செய்தது அல்ல என்று சிலர் பிரச்சாரம் செய்வது அடிப்படை ஆதாரமற்றது. பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பதை தொடர்ந்து வாகன பார்க்கிங் வசதியும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பம்பையில் அதிகமான வாகனங்கள் வருவதை கணக்கில் கொண்டு 1200 சிறிய வாகனங்கள் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல எருமேலியில் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான ஆறரை ஏக்கர் இடத்தில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.