பழநி முருகன் கோயிலில் பரணி தீபம் ஏற்றம்; இன்று மகாதீபம், சொக்கப்பனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2024 10:12
பழநி; பழநி முருகன் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி நேற்று பரணி தீபம் ஏற்றப்பட்டது. இன்று மகாதீபம், சொக்கப்பனை ஏற்றப்பட உள்ளது
பழநி முருகன் கோயிலில் டிச. 7ல் காப்பு கட்டுதல் உடன் திருக்கார்த்திகை தீபத் திருவிழா துவங்கியது. நேற்று மாலை 5:30 மணிக்கு சாயரட்சைபூஜையுடன் மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து சண்முகார்ச்சனையுடன் மஹா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், விசேஷ பூஜை நடக்கிறது. மாலை 4:45 மணிக்கு சின்னகுமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள யாகசாலை தீபாராதனை நடைபெறுகிறது. 6:00 மணிக்கு திருகார்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றுதல் நடக்கிறது. இதையொட்டி இன்று மதியம் 2:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை கோயில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இன்று வரும் பக்தர்கள் யானை பாதை வழியாக சென்று படிப்பாதை வழியாக வர வேண்டும். இன்று இரவு தங்கரத புறப்பாடும் கிடையாது.