பதிவு செய்த நாள்
13
டிச
2024
01:12
மேஷம்; அசுவினி.. நினைத்ததை சாதிக்கும் வலிமையுடைய உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் முன்னேற்றமான மாதம். கடந்த கால நெருக்கடி விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் சரணடையும் நிலை உண்டாகும். வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படும். ராசி அதிபதி வக்ரம் அடைந்திருப்பதால் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். லாப ஸ்தான சனி பகவான் எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்குவார். வரவுகளை அதிகரிப்பார். தொழிலில் இருந்த தடை நீங்கும். புதிய தொழில், வேலை வாய்ப்பிற்கு முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.
பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். புத பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். கலைஞர்களுக்கும், வியாபாரிகளுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கேட்ட கடன் கைக்கு வரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். உறவுகளின் உண்மை அன்பு வெளிப்படும்.
சந்திராஷ்டமம்: டிச. 27, 28.
அதிர்ஷ்ட நாள்: டிச. 16, 18, 25. ஜன. 7, 9.
பரிகாரம்: விநாயகரை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
பரணி; செயல்களில் துணிவு கொண்ட உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நன்மையான மாதம். நீங்கள் நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர். சனி பகவான் ஆட்சியாக சஞ்சரிப்பதால் செய்து வரும் தொழில், பார்த்துவரும் உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு ஏற்படும். நெருக்கடியின் காரணமாக மூடப்பட்டிருந்த தொழில் நிறுவனங்களை மீண்டும் திறந்திடக்கூடிய நிலை உண்டாகும். உற்பத்தி அதிகரிக்கும். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள். சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். வருமானம் உயரும். புதிய பொருள் சேரும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். தெய்வ வேண்டுதல்கள் நிறைவேறி குடும்பத்துடன் கோயில்களுக்கு சென்று வருவீர்கள். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்குவீர். ஒரு சிலர் வேலையில் இருந்து விலகி சொந்தமாக தொழில் தொடங்குவீர். கலைஞர்கள் கனவு நனவாகும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். புதபகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் தெளிவாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். புதிய முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆலோசனையால் படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: டிச. 28, 29.
அதிர்ஷ்ட நாள்: டிச. 18, 24, 27. ஜன. 6, 9.
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட நன்மை உண்டாகும்.
கார்த்திகை 1ம் பாதம்: முதன்மையாக இருக்கும் சக்தி கொண்ட உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் யோகமான மாதம். முன்பு ஏற்பட்ட நெருக்கடி விலகும். மனக்குழப்பம் நீங்கும். தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்திடக்கூடிய வலிமை உண்டாகும். பிறரிடத்திலும், உடன் பணிபுரிபவர்கள் நலனிலும் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர். மற்றவருக்கு உதவி செய்வதில் முதன்மையாக இருப்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக பூர்த்தியாகும். நினைத்த வேலை நடக்கும். செய்து வரும் தொழிலில் இருந்த தடை விலகும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். வேலைக்காக முயற்சித்து வந்தவர்கள் கனவு நனவாகும். கடன் தொல்லை விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வரவேண்டிய பணம் வரும். ஒரு சிலருக்கு புதிய வீடு, சொத்து சேரும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கலைஞர்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். விவசாயிகள் விளைச்சலில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். உழைப்பாளர்களுக்கு முயற்சிக்கேற்ற ஆதாயம் உண்டாகும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும். வேலை பார்க்கும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பெரியோர் ஆதரவால் உங்கள் முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு இருந்த நெருக்கடி நீங்கும். படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: டிச. 29.
அதிர்ஷ்ட நாள்: டிச. 18, 19, 27, 28. ஜன. 1, 9, 10.
பரிகாரம்: அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்ய சுபிட்சம் உண்டாகும்.