பதிவு செய்த நாள்
13
டிச
2024
01:12
சிம்மம்; மகம்.. சூழ்நிலையை அறிந்து செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். எல்லாவற்றிலும் கவனமாக இருப்பது நல்லது. சப்தம ஸ்தானத்தில் சனிபகவான், அஷ்டம ஸ்தானத்தில் ராகு, தன குடும்ப ஸ்தானத்தில் கேது என்ற சஞ்சார நிலை நெருக்கடிகளை அதிகரிக்கும். திறமையின் காரணமாக எல்லாவற்றையும் சமாளிக்கும் சக்தியும் உண்டாகும். குடும்பத்தினரை அனுசரித்துச்செல்வதும், வார்த்தைகளில் நிதானம் காப்பதும், வரவு செலவில் கவனமாக இருப்பதும் இந்த நேரத்தில் அவசியம். புதியவர்களை நம்பி எந்த ஒரு முயற்சியிலும் ஈடுபட வேண்டாம். அதனால் நெருக்கடியே ஏற்படும். உடல் நிலையில் எப்போதும் கவனமாக தேவை. பூர்வீக சொத்து விவகாரத்தில் பிரச்னை ஏற்படும். அதைத் தள்ளி வைப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியதாக இருக்கும். ஜன. 1 வரை புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் புத்திசாலித்தனமாக செயல்படுவீர். பிரச்னைகளை சமாளித்திடக்கூடிய சக்தி உண்டாகும். செய்துவரும் தொழிலில் மிகுந்த கவனமாக இருப்பதும், உத்யோகம் பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வதும் நல்லது. வீண் பிரச்னை இக்காலத்தில் உங்களைத் தேடிவரும். அவசர முடிவுகள், ஆவேச செயல்பாடுகள் அனைத்தையும் குறைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கைத்துணையின் ஆலோசனையை ஏற்று செயல்படுவதால் நெருக்கடி விலகும். மாணவர்கள் படிப்பின் மீது அக்கறை கொள்வது அவசியம்.
சந்திராஷ்டமம்: ஜன. 5, 6.
அதிர்ஷ்ட நாள்: டிச. 16, 19, 25, 28. ஜன. 1, 7, 10.
பரிகாரம்: பகவதி அம்மனை வழிபட சங்கடம் நீங்கும்.
பூரம்; சொந்த வேலையில் கவனமாக இருந்து வெற்றி அடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். புதிய முயற்சிகளை விட, வழக்கமான வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நெருக்கடிகள் இல்லாமல் போகும். உங்கள் நட்சத்திர அதிபதி சுக்ரனின் சஞ்சார நிலை சாதகமாக இல்லை. கிரகங்களின் சஞ்சார நிலைகளும் எதிர்மறையாக இருப்பதால் இந்த மாதம் ஒவ்வொன்றிலும் நீங்கள் நிதானமாக இருக்க வேண்டும். பின் விளைவுகள் பற்றி யோசிக்காமல் செயல்படுவதும், எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற தடாலடி வேலைகள் எதுவும் இந்த மாதத்தில் வேண்டாம். சூரியனும், சனியும், ராகுவும் உடல் நிலையில் ஏதேனும் பிரச்னைகளை உண்டாக்கலாம், பரம்பரை நோய்களை வெளிப்படுத்தலாம். உடல்நலனில் எப்போதும் கவனமாக இருப்பது நல்லது. வரவு செலவிலும் கவனம் தேவை. குடும்பத்தினரை அனுசரித்துச்செல்வதும், வாழ்க்கைத்துணையின் ஆலோசனையை ஏற்று செயல்படுவதும் நல்லது. முடிந்தவரை தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதால் சங்கடம் இல்லாமல் போகும். கடன் வாங்குவது கொடுப்பது போன்றவற்றையும் இந்த மாதத்தில் தள்ளி வைப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். உங்கள் வார்த்தைகளில் நிதானம் வேண்டும். எல்லாவற்றையும் சமாளித்திடக்கூடிய சக்தியினை புத பகவான் வழங்குவார். அதன்பிறகு உங்கள் செயல்பாடுகளை ஒரு கட்டுக்குள் நீங்கள் வைத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
சந்திராஷ்டமம்: ஜன. 6, 7.
அதிர்ஷ்ட நாள்: டிச. 19, 24, 28. ஜன. 1, 10.
பரிகாரம்: குல தெய்வத்தை வழிபட நன்மை உண்டாகும்.
உத்திரம்: நினைத்ததை நினைத்தபடி நடத்தி முடிக்கும் வலிமை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் யோசித்து செயல்பட வேண்டிய மாதம். சுய ஜாதகத்தில் திசா புத்தி சாதகமாக இருந்தால் நற்பலன்கள் கூடுதலாகும். மாதம் முழுவதும் சூரிய பகவான் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல் நிலையிலும் மன நிலையிலும் குழப்பம் இருந்து கொண்டிருக்கும். தெளிவாக செயல்பட முடியாத அளவிற்கு உங்கள் சூழ்நிலையும் உடல்நிலையும் அமையும். கேதுவும், சனி பகவானும், ராகுவும் ஏதேனும் ஒரு வகையில் உங்களுக்கு தொடர்ந்து நெருக்கடிகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பர். இந்த நேரத்தில் அதிர்ஷ்டக்காரகன் சுக்ரனின் சஞ்சாரமும் சாதகமற்ற நிலையில் இருப்பதால் எதிர்பாலினர் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டிய நிலை ஒரு சிலருக்கு ஏற்படும். உத்யோகம் பார்க்கும் இடத்தில் வேலையில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது. வியாபாரிகள் புதிய முதலீடு செய்வதற்கு முன்பு நன்றாக யோசித்து அதன் பிறகு முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். தொழிலாளர்கள் தங்கள் பணியில் கவனமாக இருப்பது நல்லது. வாழ்க்கைத்துணையின் ஆலோசனை இந்த நேரத்தில் உங்களுக்கு மிகவும் அவசியம். உடன் பணி புரிபவர்களையும், பிறரையும் அனுசரித்துச் செல்வதால் சங்கடங்கள் ஏற்படாமல் போகும். யாரிடமும் கோபத்தையோ பிரச்னைகளையோ இந்த நேரத்தில் கொண்டு செல்ல வேண்டாம். வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தி வருவது நன்மையாகும். பிள்ளைகள் மீது அக்கறை கொள்வதும், அவர்களை உங்கள் கண்காணிப்பிற்குள் வைத்துக்கொள்வதும் நல்லது. மாணவர்கள் ஆசிரியர்கள் அறிவுரைகளை இப்போதிருந்தே பின்பற்றுவது நல்லது.
சந்திராஷ்டமம்: ஜன. 7.
அதிர்ஷ்ட நாள்: டிச. 19, 28. ஜன. 1, 10.
பரிகாரம்: சூரிய பகவானை வழிபட்டுவர வாழ்வில் நன்மை உண்டாகும்.