பதிவு செய்த நாள்
13
டிச
2024
01:12
கடகம்; புனர்பூசம் 4 ம் பாதம்.. பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நன்மையான மாதம். நீங்கள் எடுக்கின்ற முயற்சி யாவும் வெற்றியாகும். தடைபட்ட வேலை நடக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், ராசிக்குள் செவ்வாய் வக்ரம் அடைந்திருந்தாலும், முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உங்கள் முன்னேற்றத்திற்குரிய யோக பலன்களை தொடர்ந்து வழங்குவார். உங்கள் முயற்சிக்கேற்ப ஆதாயம் கிடைக்கும். புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் புதிய சொத்து சேரும். உங்களுடைய புத்திசாலித்தனம் வெளிப்படும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடித்திடக்கூடிய சக்தி உண்டாகும். சாதுர்யமாக செயல்பட்டு திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மையாகும். அதன்பிறகு தெளிவு பிறக்கும். உங்கள் பணியில் கவனமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். எதிர்காலத்தை மனதில் வைத்து செயல்படத் தொடங்குவீர். இந்த நேரத்தில், அஷ்டம ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் கவனமாக இருப்பது நல்லது. ஒரு சிலருக்கு கவுரவத்திலும் குறைவு ஏற்படலாம். அதன் காரணமாக மன உளைச்சல் ஏற்படவும் வாய்ப்புண்டு. உடல்நிலை, செல்வாக்கு ஆகிய இரண்டு நிலைகளிலும் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். நண்பர்களால் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும் அரசியல்வாதிகளுக்கு உண்டான வம்பு வழக்கு முடிவிற்கு வரும். மாணவர்களுக்கு படிப்பின் மீதான அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: ஜன. 3.
அதிர்ஷ்ட நாள்: டிச. 20, 21, 29, 30. ஜன. 2, 11, 12.
பரிகாரம்: திருக்குவளை பிரம்மபுரீஸ்வரரை வழிபட நன்மை உண்டாகும்.
பூசம்: நீதி நேர்மை நியாயம் என வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் யோகமான மாதம். சனி பகவானால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும், முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்குவார். முன்னேற்றத்தை உண்டாக்குவார். நினைத்த வேலைகளை நடத்தி முடிக்கக்கூடிய சக்தியினை வழங்குவார். சூரியன் சங்கடங்களில் இருந்து விடுவிப்பார். நோய் நொடிகள் குணமாகும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட போட்டி நீங்கும் போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர். வம்பு வழக்கு சாதகமாகும். அரசு வழி முயற்சிகளில் லாபம் ஏற்படும். தொழில் தொடங்க, வீடு கட்ட எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களின் பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். புத பகவானின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வியாபாரம் முன்னேற்றம் அடையும். தொழில் லாபம் தரும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். தடைபட்டிருந்த வேலைகளை சாமர்த்தியமாக நடத்தி முடிப்பீர்கள். சுக்ரனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் உண்டான நெருக்கடி நீங்கும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உழைப்பாளர்களுக்கு எதிர்பார்த்த வருமானம் வரும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்: ஜன. 3, 4.
அதிர்ஷ்ட நாள்: டிச. 17, 20, 26, 29. ஜன. 2, 8, 11.
பரிகாரம்: திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரரை வழிபட வளம் உண்டாகும்.
ஆயில்யம்; திறமையாக செயல்பட்டு, நினைத்த வேலைகளை நடத்தி முடிக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் யோகமான மாதம். நீங்கள் நினைத்த வேலை ஒவ்வொன்றாக நடக்கும். தடைபட்டிருந்த முயற்சி வெற்றியாகும். புதன் யோகப் பலன்களை வழங்குவார். பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உறவினர்களால் உதவி உண்டாகும். வெளியூர் பயணம் லாபம் தரும். 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியன் செயல்களை வெற்றியாக்குவார். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். வேலை வாய்ப்பிற்கு காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். உடல் நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். அலுவலகப் பணியில் இருந்த நெருக்கடி குறையும். சுக்ரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை ஆதரவு கூடும். சனி பகவான் ஆட்சியாக சஞ்சரிப்பதால் உடல் நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். புதிய முயற்சிகளில் பின் விளைவு பற்றி யோசித்து செயல்படுவது நல்லது. எந்த ஒன்றிலும் பிறரை நம்பாமல் உங்களுடைய நேரடிப் பார்வை இருப்பது நல்லது. தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். தெய்வ அனுகூலமும், பெரியோரின் உதவியும் இந்த நேரத்தில் கிடைக்கும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பின் மீது அக்கறை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: ஜன. 4, 5.
அதிர்ஷ்ட நாள்: டிச. 20, 23, 29. ஜன, 2, 11.
பரிகாரம்: பரிக்கல் நரசிம்மரை வழிபட சங்கடம் நீங்கும்.