பதிவு செய்த நாள்
13
டிச
2024
01:12
கன்னி; உத்திரம் 2, 3, 4 ம் பாதம்.. வெற்றியை மட்டுமே இலக்காக கொண்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் யோகமான மாதம். இதுவரை உங்கள் வாழ்க்கையில் இருந்த நெருக்கடிகள் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பிக்கும். எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றாக பூர்த்தியாகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். டிச. 30 வரை அதிர்ஷ்டக்காரகன் சுக்ரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். ஜன. 1 முதல் புதனும் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய சொத்து சேர்க்கை இருக்கும். உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகி ஆரோக்யமாக செயல்படத் தொடங்குவீர். இருந்தாலும், புதிய நட்புகளிடம் எச்சரிக்கை அவசியம். தவறான வழிகாட்டுதலை யார் வழங்கினாலும் அவர்களை விட்டு விலகுவது உங்களுக்கு நன்மையாகும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: ஜன. 7, 8.
அதிர்ஷ்ட நாள்: டிச. 19, 23, 28. ஜன. 1, 5, 10.
பரிகாரம் சங்கர நாராயணரை வழிபட சங்கடம் விலகும்.
அஸ்தம்; தெளிவாக செயல்பட்டு திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் முன்னேற்றமான மாதம். 6 ம் இடத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் சனி பகவான் இதுவரையில் உங்களுக்கிருந்த நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். வியாபாரம், தொழிலில் தோன்றிய போட்டி விலகும். போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர். இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். உங்கள் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட விரிசல் விலகி இணக்கமான நிலை உண்டாகும். பிள்ளைகள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பளித்து செயல்படுவார்கள். ஜன. 1 முதல் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த பணம் வரும். உறவுகளின் ஆதரவு கூடும். நீண்ட நாட்களாக வாங்க முயற்சித்து வந்த இடத்தை வாங்கக்கூடிய நிலை உண்டாகும். இந்த நேரத்தில் ஜென்ம ராசிக்குள் கேதுவும் ஏழாம் இடத்தில் ராகுவும் சஞ்சரித்து வருவதைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். குடும்ப உறவுகளை அனுசரித்து செல்வதுடன், புதிதாக வருபவர்களிடம் அதிகபட்ச எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். ஆசைகளுக்கு இடம் கொடுத்தால் அதன் காரணமாக இழப்புகளையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். உங்கள் விரயாதிபதி சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஒரு பக்கம் அலைச்சல் அதிகரிக்கும். மாணவர்கள் ஆசிரியரின் அறிவுரைகளை ஏற்பது நல்லது.
சந்திராஷ்டமம்: ஜன. 8, 9.
அதிர்ஷ்ட நாள்: டிச. 20, 23, 29. ஜன. 2, 5, 11.
பரிகாரம்: பெருமாளை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
சித்திரை 1, 2 ம் பாதம்; துணிச்சலும் தைரியமும் இருந்தாலும் எதிலும் நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் அதிர்ஷ்டமான மாதம். இதுவரை இருந்த நெருக்கடி விலகும். செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் வக்ரம் அடைந்தாலும், 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்கள் திறமையை அதிகரிப்பார். தேவைகளைப் பூர்த்தி செய்வார். நெருக்கடிகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலக ஆரம்பிக்கும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி நீங்கும். எதிர்ப்பு காணாமல் போகும். உங்களை எதிர்த்து செயல் பட்டவர்கள் உங்களிடமே வந்து சேரக்கூடிய நிலை ஏற்படும். இழுபறியாக இருந்த விவகாரம், பிரச்னை உங்களுக்கு சாதகமாக முடியும். தடைபட்ட வேலைகளை முடித்து ஆதாயம் காண்பீர்கள். நண்பர்கள் உறவினர்கள் இந்த நேரத்தில் உங்களுக்கு உதவியாக இருப்பர். ஒரு பக்கம் அலைச்சல் அதிகரித்தாலும் மறுபக்கம் அதனால் ஆதாயமும் இருக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை உங்களுக்கு நன்மையை உண்டாக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் லாபம் அதிகரித்து புதிய பொருட்கள் வாங்குவீர். சுக்ரன் சாதகமாக சஞ்சரிப்பதால் வருவாய் அதிகரிக்கும். புத பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் புத்திசாலித்தனமாக செயல்பட்டு ஒவ்வொரு வேலைகளையும் நடத்தி அதில் லாபம் காண்பீர்கள். உத்யோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். பணி புரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்: ஜன. 9.
அதிர்ஷ்ட நாள்: டிச. 18, 23, 27. ஜன. 5.
பரிகாரம்: வடிவேலனை வழிபட வாழ்வில் வளம் காண்பீர்கள்.