பதிவு செய்த நாள்
16
டிச
2024
11:12
ஆர்.கே.பேட்டை; ஆர்.கே.பேட்டை அடுத்த, ராசபாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது பால குருநாதீஸ்வர சுவாமி கோவில். இந்த தலத்தில் பிரம்மா, சிவன், விஷ்ணு, விநாயகர், முருகன் என, பஞ்சமூர்த்திகளும் ஒரே சிலையில் அருள்பாலிக்கின்றனர். இந்த கோவிலில் நித்திய வழிபாடுகளுடன் பவுர்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட வைபவங்களும் நடந்து வருகின்றன. கார்த்திகை பவுர்ணமியான நேற்று காலை, மூலவர் பால குருநாதீஸ்வரருக்கு ருத்ராபிஷேகம் நடத்தப்பட்டது. காலை 9:30 மணிக்கு துவங்கிய யாகசாலை பூஜை தொடர்ந்து, பிற்பகல் 12:00 மணி வரை நடந்தது. இதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்களுடன் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து வந்திருந்த பக்தர்களும் பங்கேற்றனர். இதே போல, அத்திமாஞ்சேரிபேட்டை வள்ளலார் மடத்தில் பவுர்ணமியை ஒட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 10:00 மணிக்கு ஜோதி தரிசனத்தில் திரளான சைவ அன்பர்கள் பங்கேற்றனர்.