பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த பழைய பிள்ளையார்குப்பம் கிராமத்தில் விநாயகர், சித்தாங்காத்தார், வீரன், வரதய்யன் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் முதல் கால பூஜை துவங்கியது. நேற்று காலை இரண்டாம் கால யாக சாலை பூஜை, தத்துவார்ச்சனை, நாடி சந்தனம், மகா தீபாராதனை நடந்தது. காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி காலை 10:15 மணியளவில் மகா கும்பாபி ஷேகம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.