மங்களூரு: வாய் பேச முடியாத நிலையில் இருந்த இளைஞருக்கு, சபரிமலைக்கு சென்று வந்ததும் பேச்சு வந்துள்ளது. இது, அய்யப்ப சுவாமியின் அருள் என, கூறுகின்றனர்.
தட்சிணகன்னடா, புத்துாரின் சாமதெட்காவில் வசிப்பவர் பிரசன்னா, 18. இவர் மஹாலிங்கேஸ்வரா ஐ.டி.ஐ.,யில், இரண்டாம் ஆண்டு டிப்ளமா படிக்கிறார். இவர் வாய் பேச முடியாதவர். காதும் கேட்காது; சைகை மூலமாகவே உணர்த்துவார். தன் கிராமத்தில் பலர், மாலை போட்டு சபரிமலைக்கு செல்வதை பார்த்து, தானும் அய்யப்பனை தரிசிக்க வேண்டும் என, விரும்பினார். கடந்தாண்டு மாலை அணிந்து, விரதம் அனுஷ்டித்து, சபரிமலை சென்றார். கரடு, முரடான பாதையில் நடந்து சென்று, அய்யப்பனை தரிசனம் செய்தார்.அய்யப்பனை தரிசனம் செய்து திரும்பிய பின், அவருக்கு பேச்சு வர துவங்கியுள்ளது. வார்த்தைகள் தெளிவாக இல்லை என்றாலும், நன்றாகவே புரிகிறது. அய்யப்ப கோஷம் எழுப்புகிறார். இதுவரை வாயில் இருந்து ஒரு வார்த்தையும் வந்தது இல்லை. இப்போது பேசுகிறார் என்றால், இதற்கு அய்யப்ப சுவாமியின் அருளே காரணம் என, குடும்பத்தினர் நம்புகின்றனர். இம்முறை மீண்டும் சபரிமலைக்கு மாலை போட்டுள்ளார்,