பதிவு செய்த நாள்
29
நவ
2012
10:11
ஒரு பக்தருக்கு, இரண்டுபாக்கெட் அப்பம் மட்டுமே விற்கப்படுவதை கண்டித்து, சபரிமலையில், அய்யப்ப பக்த ர்கள் சரண கோஷங்களை முழக்கி, திடீர் போராட்டம் நடத்தினர். சபரிமலை அய்யப்பன் கோவிலில், தற்போது மண்டல உற்சவம் நடந்து வருகிறது. இதில், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், திரளான பக்தர் கள் இங்கு வந்து செல்கின்றனர். இங்கு விற்கப்பட்ட அப்பம் கெட்டுப் போயிருப்பது கண்டு, அதிர்ச்சி அடைந்த பக்தர்கள், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அதிகாரிகளிடம் புகார் செய்தனர். இதை தொடர்ந்து, விசாரணை நடத்தப்பட்டு, லட்சக்கணக்கான அப்பங்கள் அழிக்கப்பட்டு, தினமும், புதிதாக அப்பங்கள் தயாரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், ஒரு பக்தருக்கு, 14அப்பங்கள் அடங்கிய, இருபாக்கெட்டுகள் மட்டுமேகிடைக்கின்றன. மேலும்,நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து, அப்பம் வாங்கவேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது. இது போதாது; கூடுதல் அப்பங் கள் தேவை என, பக்தர் கள் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போதுள்ள சூழ்நிலையில், அப்பங்களை முன்னதாகவே தயாரித்து, கிடங்கில் சேமித்து, விற்பனை செய்வதற்கான, வாய்ப்பு குறைவு. எனவே, தினமும் அப்பம் தயாரித்து, குறைந்த எண்ணிக்கையில் பக்தர்களுக்கு வழங்க தேவஸ்வம் போர்டு முடிவு செய்தது. இந்நிலையில், 26ம் தேதி சபரிமலையில் கட்டுக்கடங் கா பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. அன்றிரவு அப்பம் தீர்ந்து விட்டதால், பக்தர்களுக்கு விற்பனை செய்ய முடியவில்லை. மறுநாள், தங்கள் ஊருக்கு திரும்ப வேண்டிய பக்தர்களுக்கு இது வருத்தத்தை ஏற்ப டுத்தியது. பல பக்தர்கள் பம்பையில் இருந்து, அப்பத்திற்கான கூப் பன்களை வாங்கியுள்ளனர். அவர்களுக்கும், சபரிமலைகவுன்டர்களில், ஒரு ஆளுக்கு இரு பாக்கெட் அப்பம் மட்டு÷ ம, விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, பம்பையில் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும், இது பக்தர்களை ஏமாற்றும் செயல் என்றும், பக்தர்கள் புகார் தெரிவித்தனர். ஆத்திரமடைந்த பக்தர்கள், விற்பனை கவுன்டர்களை முற்றுகையிட்டு, சரணகோஷங்களை எழுப்பினர். சபரிமலை கோவில் அதிகாரிகளும், போலீசாரும் விரைந்து சென்று பக்தர்களை சமாதானப்படுத்தினர். பக்தர்களின் திடீர் முற்றுகை போராட்டத்தால், சபரிமலை யில் ஒரு மணிநேரம் பரபரப்பு காணப்பட்டது.