பதிவு செய்த நாள்
29
நவ
2012
10:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில், நேற்று தீர்த்த உற்சவம் நடந்தது. இக்கோயிலில் நவ., 19ல் துவங்கிய திருவிழாவில் தினமும் ஒரு வாகனத்தில் சுப்பிரமணியசுவாமி, தெய்வானை வீதி உலா வந்தனர். நேற்றுமுன்தினம் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. நேற்று தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் விநாயகர், சுப்பிரமணியசுவாமி, தெய்வானை அம்மன், சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாள், அஸ்தரதேவர் எழுந்தருளினர். யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால், உற்சவர்களுக்கு அபிஷேகம் நடந்தது. பின் சுவாமிகளுக்கு புஷ்ப அலங்காரமாகி தீபாராதனைகள் நடந்தன. உச்சிகால பூஜை முடிந்து, சுப்பிரமணியசுவாமி, தெய்வானை, சரவணப் பொய்கையில் எழுந்தருளினர். சுவாமி சன்னதியில் அஸ்தரதேவருக்கு தீர்த்த உற்சவம் நடந்தது.