பதிவு செய்த நாள்
20
ஜன
2025
12:01
பல்லடம்; பல்லடம் அருகே, நாரணாபுரம் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் பாலாலயம் நடந்தது.
பல்லடத்தை அடுத்த, நாரணாபுரத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இயக்கு கோவிலை, 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினர் பராமரித்து, விழாக்கள் பண்டிகைகள் கொண்டாடி வருகின்றனர். கோவில் கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், விரைவில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று கோவில் திருப்பணி துவங்குவதற்கான பாலாலயம் நடந்தது. முன்னதாக, காலை, 5.00 மணிக்கு விநாயகர் மற்றும் நவக்கிரக பூஜைகளுடன் பாலாலய விழா துவங்கியது. பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கலசங்களில் சுவாமி ஆவாஹனம் செய்யப்பட்டு, சிறப்பு வேண்டி வழிபாடுகள் நடந்தன. தொடர்ந்து, சக்தி வடிவமாக ஸ்ரீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பழைய முறைப்படி கருங்கட்களால் கருவறை அமைக்கப்பட்டு, இறைவன் பிரதிஷ்டை செய்யப்பட்டு திருப்பணிகள் நிறைவடைந்ததும், கும்பாபிஷேக விழா தேதி முடிவு செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும் என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.