பதிவு செய்த நாள்
10
பிப்
2025
03:02
பண்ருட்டி; பண்ருட்டி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
விழா, கடந்த 8ம் தேதி காலை 8:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. இன்று காலை 7:00 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜையைத் தொடர்ந்து, 9:15 மணிக்கு கடம் புறப்பாடாகி காலை 9:45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், தி.மு.க., பொருளாளர் ராமலிங்கம், மாவட்ட துணைச் செயலாளர் தணிகைசெல்வம், கவுன்சிலர் சோழன் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழா குழுவினர்கள் எஸ்.வி.ஜூவல்லர்ஸ் உரிமையாளர்கள் வைரக்கண்ணு, அருள், ரவி, புருேஷாத்தம்மன், ராதாகிருஷ்ணன், ரவி, சேகர், ராஜா, பார்த்திபன், சக்திவேல் ஆகியோர் செய்திருந்தனர்.