பதிவு செய்த நாள்
12
பிப்
2025
02:02
மேட்டுப்பாளையம்; தைப்பூசம் ஏழாம் ஆண்டு விழாவில் 101 பெண்கள் பால் குடம் எடுத்து வந்து, கல்யாணசுப்பிரமணியசாமிக்கு அபிஷேகம் செய்தனர்.
கோவை மாவட்டம் காரமடை அருகே கோடதாசனூரில், ராயர் சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோவிலின் வளாகத்தில் கல்யாண சுப்பிரமணியசாமி சன்னதி உள்ளது. இக்கோயிலில், தைப்பூசம் ஏழாம் ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று கோடதாசனூர், மங்கலகரைபுதூர், டி.ஜி. புதூர், காந்திநகர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 101 பால் குடங்களை பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கோயிலை அடைந்தனர். பின் கோவிலில் உள்ள கல்யாணசுப்பிரமணியசாமிக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. பின் சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா குழு கெளரவ தலைவர் மனோகரன், கோவில் பூசாரிகள் சுப்பிரமணியம், சத்திவேல் மற்றும் விழா குழு கமிட்டியினர் செய்திருந்தனர்.