பதிவு செய்த நாள்
17
பிப்
2025
10:02
நத்தம்; நத்தம் ஊராளிபட்டியில் மந்தை முத்தாலம்மன், செல்வ விநாயகர், பொன் அய்யனார் சுவாமி கோயில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது. நேற்று முன்தினம் அலங்கரிக்கப்பட்ட யாகசாலையில் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, முதல் காலயாக பூஜைகள் நடந்தது. 2 -ம் நாள் காலை பூர்ணாகுதி தீபாராதனை 2ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. காசி, ராமேஸ்வரம் பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தகுடங்கள் மேளதாளம் முழங்க, ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது. வானத்தில் கருடன் வட்டமிட்டது. மூலவர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனை நடந்தது. புனித தீர்த்தமும் பூஜை மலர்களும் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம், அ.தி.மு.க., மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர்பாட்சா, தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார், நகர செயலாளர் ராஜ்மோகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேனம்மாள்தேன்சேகர் பங்கேற்றனர்.