போடி; போடி நந்தவனம் தெருவில் 100 ஆண்டுகளுக்கு முன் உருவான ஜெய சக்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. அங்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இங்கு வேண்டி வணங்கும் நபர்களுக்கு வேண்டிய வரம் கிடைப்பதாக ஐதீகம். இக்கோயிலில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர், அபிராமி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கும்பாபிஷேக யாக குண்டல ஹோமம் நடந்தது. நேற்று காலை கும்பாபிஷேகம் அப்பகுதி மக்கள், கோயில் திருப்பணி கமிட்டி சார்பில் நடந்தது. விநாயகர், அபிராமி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர், அபிராமி அம்மனின் தரிசனம் பெற்றுச் சென்றனர். அன்னதானம் வழங்கப்பட்டன.