பொள்ளாச்சி; பொள்ளாச்சி, டி.கோட்டாம்பாட்டி உச்சி மாகாளியம்மன் கோவிலில், அம்மன் திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பொள்ளாச்சி, டி.கோட்டாம்பட்டி உச்சி மாகாளியம்மன் கோவில் திருவிழா, கடந்த 11ம் தேதி நோம்பு சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, தெய்வகுளம் காளியம்மன் கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வருதல், விநாயகருக்கும் அம்மணீஸ்வரருக்கும் தீர்த்தல் இடுதல் நடந்தது. பூவோடு மற்றும் சக்தி கும்பம் முத்தரித்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். நேற்று, காலை, 5:00 மணிக்கு உச்சி மாகாளியம்மனுக்கு தீர்த்தம் இடுதல், காலை, 6:30 முதல் 7:30 மணிக்குள் அம்மனுக்கு திருக்கல்யாணம் மற்றும் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.