வடபழனி முருகன் கோவிலில் மாசி கிருத்திகை; மத்திய இணை அமைச்சர் முருகன் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2025 04:03
சென்னை; சென்னை வடபழனி முருகன் கோவிலில் மத்திய இணை அமைச்சர் முருகன் சுவாமி தரிசனம் செய்தார்.
வடபழனி முருகன் கோவிலில் மாசி கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்டவைகளால், சிறப்பு அபிஷேகம், ஆராதனை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இன்று சென்னை வந்த மத்திய இணை அமைச்சர் முருகன் வடபழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.