திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து செல்கின்றனர். அருணாசலேஸ்வரரையும் தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக, பணம், தங்கம் மற்றும் வெள்ளியை செலுத்தி செல்கின்றனர். தை மாத பவுர்ணமி முடிந்து, கோயில்களில் உள்ள உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில், 4.18 கோடி ரூபாய், 290 கிராம் தங்கம், 2,375 கிராம் வெள்ளி நகை காணிக்கையாக கிடைத்தது.