பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி அருள்ஜோதி வீதியில் உள்ள சங்கராலயத்தில் உலக நலன் வேண்டி 58ம் ஆண்டு மகா ருத்ர மகா யாகம் நேற்று காலை 6:00 மணிக்கு வாஸ்து ஜெபத்துடன் துவங்கியது. கங்கா தீர்த்தத்துடன், சோடச ஸஹஸ்ர மஹா கணபதி ஹோமம் நடந்தது. திருஆவினன்குடியில் அபிஷேகம் தீபாராதனை நடந்து பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ர நாம ஜெபம் செய்யப்பட்டது. இன்றும், நாளையும் மகா கணபதி யோகம், மகாருத்ர மகா சங்கல்பம், மகா ருத்ர ஜெபம், தீபாராதனை, மாலை 5:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாமம் உள்ளிட்வை நடைபெறும். மார்ச் 12 அதிகாலை 4:00 மகா கணபதி ஹோமம் உள்ளிட்டவற்றை தொடர்ந்து பூர்ணாஹூதி, பழநியாண்டவர் தரிசனம், பிரசாதம் வழங்குதல் நடக்கும். யாக நாட்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது.