பதிவு செய்த நாள்
18
மார்
2025
12:03
பெங்களூரு தெற்கு பகுதியில் வசந்தபுராவில் அமைந்து உள்ளது ஸ்ரீ வசந்த வல்லபராய சுவாமி கோவில். இக்கோவில் 12ம் நுாற்றாண்டில், சோழர்களால் சீரமைக்கப்பட்டது. அவ்வழியாக வந்த மாண்டவ்ய ரிஷி, இங்கிருந்த குகையில் தங்கினார். அப்போது அங்கு சுயமாக உருவான கல்லை கண்டார். அப்போது முதல் விஷ்ணுவின் மற்றொரு அம்சமான வல்லபராய சுவாமி என்பதை உணர்ந்தார். ‘திருப்பதி செல்ல முடியாத தன் பக்தர்களுக்காக இங்கு குடியேறியதாக’, என அசிரீரி கேட்டது. பின், அவரை நினைத்து, தியானித்து வந்தவர், கோவில் கட்டினார். மக்களும் வல்லபராய சுவாமியை தரிசித்து வந்தனர். வசந்த நாயகி – பத்மாவதி தாயாருடன் வசந்த வல்லபராய சுவாமி அருள்பாலிக்கிறார். அதன் பின், சோழர்களால் இக்கோவில் சீரமைக்கப்பட்டது. இப்பகுதியில் கோவிலை சுற்றி ஐந்து தெப்ப குளங்கள் இருந்தன. ஆனால் காலப்போக்கில் நான்கு தெப்ப குளங்கள் மறைந்தன. இந்த தெப்பகுளம், 2019 ல் இன்போசிஸ் அறக்கட்டளை சார்பில் சீரமைக்கப்பட்டது. தற்போது இங்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இக்கோவிலில் கன்னட ஷ்ராவண மாதத்தில், நான்கு சனிக்கிழமைகள்; மகாமாசம், பிரம்மோத்சவம் கொண்டாடப்படுகிறது. நாராயண வனத்தில் லட்சுமி தேவியை, வல்லபராய சுவாமி திருமணம் செய்த பின், இங்குள்ள தீர்த்தத்தில் குளித்தார் என்று கூறப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியின் போது, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமைகளில் கங்கன பாக்யா நடத்தப்படுகிறது. தனுர் மாதத்தில் தினமும் காலையில், சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
மேலும் விபரங்களுக்கு 080 – 2666 3874 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். – நமது நிருபர் –