உசிலம்பட்டி; உசிலம்பட்டி தொட்டப்பநாயக்கனூரில் பாண்டியர்கள் காலத்தில் கற்கோயிலிலாக கட்டப்பட்டிருந்த சிவாலயம் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் சிதைந்து போயிருந்தது. தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. சிதைந்து கிடந்த கட்டிட கற்களை ஒழுங்குபடுத்தி எடுத்துக்கட்டி காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் கோயில் என பெயரிடப்பட்டு கோபுரங்கள் அமைக்கும்பணி நடந்து வருகிறது. இந்த கோயில் வளாகத்தில் தேனி மாவட்டம் பழனிசெட்டியபட்டியைச் சேர்ந்த ஓதுவார் பால்வண்ணன் திருவாசகம் முற்றோதல் குழுவினர்களின் முற்றோதல் நிகழ்ச்சி நடத்தினர். தொட்டப்பநாயக்கனூர் ஜமீன்தார் பாண்டியர், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் ஆதிநாராயணன், பாலமுருகமகாராஜா ஒருங்கிணைப்பாளர்கள் வரதராஜன், சுரேஷ் மற்றும் கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.