திருவெள்ளரை புண்டரீகாசப் பெருமாள் கோவிலில் பங்குனி விழா; நெல் அளவு கண்டருளல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2025 12:03
திருச்சி; ஆழ்வார்களால் பாடப்பெற்றதும், 108 திவ்ய தலங்களுள் ஒன்றானதாகவும் விளங்குவது திருவெள்ளரை ஸ்ரீபுண்டரீகாசப் பெருமாள் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பிரமோற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ‘பிரம்மோத்ஸவ உற்சவம் கடந்த 17 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. பங்குனி பிரமோற்சவம் ஆறாம் திருநாளில் பெருமாள் நெல் அளவு கண்டருளல் மற்றும் சிறப்பு புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.