காளஹஸ்தி சிவன் கோவில் சார்பில் பக்த கண்ணப்பர் கோயிலுக்கு பட்டு வஸ்திரங்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2025 11:03
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் (உகாதி) தெலுங்கு புத்தாண்டு பண்டிகையை யொட்டி ஆண்டுதோறும் கோயில் அருகில் உள்ள பக்த கண்ணப்பர் கோயிலுக்கு சிவன் கோயில் சார்பில் பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்கள் சமர்ப்பிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று கோயில் செயல் அலுவலர் பாபிரெட்டி தலைமையில் அதிகாரிகள் பட்டு வஸ்திரங்கள் சீர்வரிசை பொருட்களை பக்த கண்ணப்பர் கோயிலுக்கு ஊர்வலமாக, கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து, தலை மீது சுமந்து மேளத் தாளங்கள் மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக பக்த கண்ணப்பர் கோயிலுக்கு கொண்டு சென்றனர் . அங்கு கோயில் அர்ச்சகரிடம் சீர்வரிசை பொருட்களை வழங்கினர் . இந்த நிகழ்ச்சியில் கோயில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.