திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் பக்தர்கள் விட்டு செல்லும் உடைகளை அகற்றும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2025 06:03
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் பக்தர்கள் நளன் குளத்தில் குளித்துவிட்டு விட்டுசெல்லும் உடைகளை உடனுக்கு உடன் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி யூனியன் பிரதேச காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி அனுக்கிரக மூர்த்தியாக அருள்பலித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி மிகவிமர்ச்சியாக நடைபெறுகிறது. இக்கோவிலில் வாக்கிய பஞ்சாங்கம் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 29ம் தேதி திருக்கணித பஞ்சாங்கம் முறைப்படி சனிப்பெயர்ச்சி நடைபெற்றது. இதனால் தினம் சனீஸ்வர பகவான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டு வருகிறது. மேலும் நளன்குளத்தில் புதிய தண்ணீர் வீடப்பட்ட நிலையில் பக்தர்கள் நளன்குளத்தில் குளித்துவிட்டு பின்னர் கலிதீர்த்த விநாயகரை தரிசனம் செய்த பின்னர் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர். பக்தர்கள் நளன் குளத்தில் விட்டு செல்லும் துணிகளை உடனுக்கு உடன் அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுப்பட்டுள்ளனர். பக்தர்கள் எவ்வித சிரமம் இல்லாமல் தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.