திருவொற்றியூர் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2025 04:04
திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகி சத்தியமூர்த்தி நகரில் பழமையான முனீஸ்வரர் – வெட்டுடையாள் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இன்று காலை கோவில் ராஜ கோபுரத்தின் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கூடியிருந்த பக்தர்கள், ‘ஓம் சக்தி... பராசக்தி’ என, விண்ணதிர முழங்கினர். பின், கொடிமரம், கருப்பசாமி சன்னதி கலசம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு, புனித நீர் ஊற்றி மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்வில், மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில், முஸ்லிம்கள், கிறிஸ்துவ பாதிரியார், கோவிலுக்கு சீர்வரிசை எடுத்து வந்தது, நெகிழ செய்தது.