பங்குனி உத்தரம்; நான்காம் படை வீடான சுவாமிமலையில் சிறப்பு அபிஷேகம்.. பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2025 11:04
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் பங்குனி உத்தர விழா; சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
கும்பகோணம்; முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்தரத்தை முன்னிட்டு மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தும் தீபம் ஏற்றியும் வழிபாடு செய்து வருகின்றனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகிறது. இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அரோகரா முழக்கங்களுடன் சுவாமி தரிசனம் செய்தும் நெய் தீபம் ஏற்றியும் வழிபாடு செய்து வருகின்றனர்.