கிருபாபுரீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் விழும் தருவாயில் உள்ள இடிதாங்கி கம்பி; பக்தர்கள் அச்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2025 05:04
திருவெண்ணெய்நல்லூர்; திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் புதியதாக கட்டப்பட்டுள்ள ராஜ கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த இடிதாங்கி கம்பி சாய்ந்து கீழே விழும் தருவாய் உள்ளதால் பக்தர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் உள்ள பிரசித்தி பெற்ற 1600 ஆண்டுகள் பழமையான இந்த ஸ்ரீ மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் உள்ளது. 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராஜகோபுரம் கட்டப்பட்டு கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோவிலின் ராஜகோபுரத்தின் மீது இடி தாக்காத வகையில் ராஜகோபுரத்திற்கு உச்சியில் இடிதாங்கி அமைக்கப்பட்டது. இந்நிலையில் இடிதாங்கி தற்போது இடிந்து விழுந்து கோபுரத்தின் உச்சியில் இருந்து கீழே விழும் தருவாயில் உள்ளது. இதனால் ராஜகோபுரத்தின் வழியாக கோவிலின் உள்ளே வரும் பக்தர்கள் அச்சமடைந்து கொண்டே உள்ளே செல்கின்றனர். இதனை பக்தர்கள் அறநிலைத்துறை அதிகாரியிடம் தெரிவித்தும் அதிகாரிகள் அலட்சியப் போக்கில் விட்டு விட்டனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாய்ந்து உள்ள இடிதாங்கி கம்பியை சரி செய்ய உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.