பதிவு செய்த நாள்
23
ஏப்
2025
10:04
நாகை; நாகையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட பாதாள காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா; மேளதாளம், காளி நடனத்துடன் களை கட்டிய முளைப்பாரி ஊர்வலத்தில், விரதமிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், சுவாமிக்கு நேர்த்தி கடன் நிறைவேற்றினர்.
நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற பாதாள காளியம்மன் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 11, ம் தேதி பால்காவடி அபிஷேத்துடன் வெகு விமர்சையாக துவங்கியது. நாள்தோறும் அம்பாள் அன்னவாகனம், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முளைப்பாரி ஊர்வலம் நேற்று இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோவிலில் இருந்து சுவாமி புறப்பாடு நடைபெற்றது. அப்போது விநாயகர், முருகன், அம்பாளுக்கு மலர்கள் தூவி, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்கள் சுவாமிக்கு பூஜை செய்து, தரிசனம் செய்தனர். சுவாமி ஊர்வலத்தில், தட்ஸ் மேளம் தாரை தப்பட்டை, கும்மியாட்டம் என திருவிழா களை கட்டியது.அப்போது அம்பாளுக்கு விரதம் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் மஞ்சளாடை அணிந்து முளைப்பாரியை நகரின் முக்கிய வீதிகள் வழியாக சுமந்து வந்து ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில் வழி நெடுகிலும் மேளதாள வாத்தியங்களுக்கு ஏற்றவாறு சிவன், பார்வதி, காளி நடனம் களை கட்டியது.பின்னர் கோவிலை வந்தடைந்த பக்தர்கள் அங்கு முளைப்பாரி முன் கும்மி பாட்டு பாடி பாதாளகாளியம்மனுக்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவையின் குலதெய்வம் என்று அழைக்கப்படும் அருள்மிகு தண்டு மாரியம்மன் கோவில் 2025-ம் ஆண்டு சித்திரை விழா கடந்த 14 - 04 -2025 முதல் தொடங்கி நடந்து வருகிறது.இதில் பக்தர்கள் அக்னி சட்டி , சக்திகரகம் எடுக்கும் நிகழ்வானது புதன்கிழமையான இன்று நடைபெற்றது. காலை 6 மணி அளவில் கோவை கோனியம்மன் கோவில் வாசலில் இருந்து ஒப்பணக்கார வீதி வழியாக காட்டூர் வந்து கோவை நஞ்சப்பா ரோட்டில் ஊர்வலமாக பக்தர்கள் தங்கள் கைகளில் அக்னி சட்ட ஏந்தியும் தலையில் சக்தி கரகம் எடுத்தும் சாலையில் நடந்து வந்தனர்.நிறைவாக கோவை - அவிநாசி ரோட்டில் உள்ள தண்டு மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை முடித்து மூலவர் தண்டு மாரியம்மன் வழிபட்டனர்.இதில் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிறைவாக பொதுமக்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.