ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ராமானுஜர் வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2025 11:04
ஸ்ரீபெரும்புதுார்; ஸ்ரீபெரும்புதுாரில், சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தவர் வைணவ மகான் ராமானுஜர். ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ராமானுஜரின் 1,000வது ஆண்டு அவதார விழா, 2017ம் ஆண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதன்படி, ராமானுஜரின் 1008ம் ஆண்டு அவதார விழா நேற்று துவங்கியது. பத்து நாள் நடைபெறும் இந்த விழாவில், ராமானுஜர் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். முதல் நாளான நேற்று, தங்க பல்லக்கில் எழுந்தருளிய ராமானுஜர், விதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் திருவிழா மே 1ல் நடைபெறும்.