சத்ய சாய்பாபா உருவம் பொறித்த 100 ரூபாய் நினைவு நாணயம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2025 10:04
புட்டபர்த்தி: புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில், சத்ய சாய்பாபா ஆராதனை மஹோத்சவம் கோலாகலமாக நடந்தது. சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, மத்திய அரசு சார்பில் அவரது உருவம் பொறித்த, 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட உள்ளது. இதற்கான உத்தரவு சமீபத்தில் அரசிதழில் வெளியிடப்பட்டது. ஸ்ரீ சத்ய சாய்பாபா ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியில் கடந்த 1926, நவ., 23ல் பிறந்தார். அவரது நினைவாக வெளியிடப்பட உள்ள 100 ரூபாய் நாணயத்தின் ஒரு பக்கத்தில் அசோக சின்னம் பொறிக்கப்பட்டு இருக்கும். மறுபக்கத்தில் சத்ய சாய்பாபாவின் உருவம் பொறிக்கப்பட்டு, 1926 -- 2026 என்றும், சத்ய சாய்பாபாவின் ஜென்ம சதாப்தி என்ற வாசகமும் பொறிக்கப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயம் 35 கிராம் எடையும், 44 மிமீ விட்டமும் கொண்டதாக இருக்கும்.