Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோழர் காலத்திய வீரபத்ர சுவாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா பக்தர்கள் பரவசம் சித்திரை தேர்த்திருவிழா பக்தர்கள் ...
முதல் பக்கம் » துளிகள்
தீராத நோய்களை தீர்க்கும் ஸ்ரீவைத்ய நாதேஸ்வரா கோவில்
எழுத்தின் அளவு:
தீராத நோய்களை தீர்க்கும்  ஸ்ரீவைத்ய நாதேஸ்வரா கோவில்

பதிவு செய்த நாள்

06 மே
2025
11:05

மனிதர்களுக்கு வாழ்க்கையில் எவ்வளவு தான் செல்வ, செழிப்பு இருந்தாலும் ஆரோக்ய குறைபாடு இருந்தால் வாழ்க்கை, மகிழ்ச்சியாக இருக்காது. மருத்துவமனைக்கு சென்று லட்சக்கணக்கில் செலவு செய்து சிகிச்சை பெற்றாலும் நோய்கள் தீருவதில்லை. இதனால் கடைசி முயற்சியாக கடவுள் மீது பாரத்தை போட்டுவிட்டு இருப்பவர்களும் உள்ளனர். இந்நிலையில் தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் கோவிலாக ஸ்ரீ வைத்ய நாதேஸ்வரா கோவில் உள்ளது.

இக்கோவில் துமகூரு அருகே சன்னிகனப்பனபாளையா என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. 800 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. சிவனை தொடர்ந்து தரிசனம் செய்து, கோவிலில் கொடுக்கும் தீர்த்தத்தை வாங்கிக் குடித்தால் தீராத நோயும் தீர்ந்துபோகும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். கோவில் அமைந்திருக்கும் இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு 1,000க்கும் மேற்பட்ட முனிவர்கள் ஒன்றாக கூடி தவம் செய்தனர் என்றும் கூறப்படுகிறது.

குழந்தை இல்லாத தம்பதி இங்கு வந்து ஒன்பது வார காலம் தொடர்ந்து பூஜை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. இரவில் கோவிலை சுற்றிநாக பாம்புகள் ஊர்ந்து செல்கின்றன. கோவிலுக்குள் திருடர்கள் நுழைந்து விடக் கூடாது என்பதற்காக, கோவிலை பாதுகாக்கும் அரணாக பாம்புகள் உள்ளதாக அர்ச்சர்கள் கூறுகின்றனர். வாரந்தோறும் திங்கட்கிழமை, விசேஷ நாட்களில் கோவில்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. சிவராத்திரி அன்று ரத உத்சவம் நடக்கிறது.

தினமும் காலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். பெங்களூரில் இருந்து 87 கி.மீ., துாரத்தில் கோவில் அமைந்துள்ளது. மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து அடிக்கடி துமகூருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. துமகூரு பஸ் நிலையத்தில் இருந்து கோவிலுக்கு குறிப்பிட்ட நேரத்தில் அரசு பஸ்கள் செல்கின்றன. ரயிலில் செல்பவர்கள் துமகூரு ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோ மூலம் கோவிலை சென்று அடையலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
ஆனி சஷ்டி திதியும், உத்திர நட்சத்திரமும் இணைந்த இந்த நாள் சிறப்பு வாய்ந்தது. இன்று அனைத்து ... மேலும்
 
temple news
அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு ... மேலும்
 
temple news
சந்திரனே மனதிற்கும் உடலுக்கும் அதிபதி, ஜாதக கோளாறு,  கிரக தோஷம், பெயர்ச்சி, நோய் தொற்று என நம் மனம், ... மேலும்
 
temple news
ஒவ்வொரு அமாவாசையிலும் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்தது. ஆனிஅமாவாசை தீராத  பாவம் ... மேலும்
 
temple news
காகத்திற்கு சாதம் வைத்தால் முன்னோர் அமைதி பெற்று நல்ஆசியளிப்பர் என்பது  நம்பிக்கை.  காகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar