பதிவு செய்த நாள்
08
மே
2025
12:05
திருப்பூர்; திருப்பூர், ராயபுரம் சின்னான்நகர் மாகாளியம்மன், மதுரைவீரன், கருப்ப ராயன் கோவில் சித்திரை திருவிழா நேற்று நடந்தது. இக்கோவிலில், கடந்த மாதம், 22ம் தேதி பூச்சாட்டுடன் நிகழ்ச்சி துவங்கியது. 6ம் தேதி கிடா வெட்டுதல், பூ வீசுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அம்மனுக்கு மாவிளக்கு ஊர்வலமும், அழகு குத்துதல், பறவை காவடி மற்றும் இளநீர் காவடி ஊர்வலம் விமரிசையாக நடந்தது. இன்று, சுவாமி உருவாரம் எடுத்து வருதல், பூவோடு சத்தாவரம்; நாளை வேடமிடுதல் மற்றும் அன்னதான நிகழ்ச்சியும், 10ம் தேதி மஞ்சள் நீர் விழாவும், 11ம் தேதி மறுபூஜையும் நடக்க உள்ளது.