ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் கங்கம்மா விஸ்வரூப தரிசனம்; முதல்வர் சந்திரபாபு நாயுடு தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2025 03:05
சித்தூர் மாவட்டம் குப்பம், பிரசன்ன திருப்பதி கங்கம்மா ஜாதரா விழாவையொட்டி, திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு, ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் ஸ்ரீவாரி சேலையை வழங்கினார்.
குப்பம், ஜாதராவின் போது திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அம்மனுக்கு சேலை சாற்றுவது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற விழாவில் தேவஸ்தான தலைவர், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தம்பதியினருடன் இணைந்து விசேஷ பூஜைகளை மேற்கொண்டனர். பின்னர், அம்மனை விஸ்வரூப தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில், முதல்வர் சந்திரபாபு நாயுடு மாநில நலன் வேண்டி பிரார்த்தனை செய்தார். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் விஸ்வரூப தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நிகழ்ச்சியில் தேவஸ்தான நிர்வாகக் குழு உறுப்பினர் சாந்தராம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்.