Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு : ஆனி ராசி பலன் கும்பம் : ஆனி ராசி பலன் கும்பம் : ஆனி ராசி பலன்
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (15.3.2026 முதல் 13.4.2026 வரை)
மகரம் : ஆனி ராசி பலன்
எழுத்தின் அளவு:
மகரம் : ஆனி ராசி பலன்

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2025
03:06

உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்

எங்கும் முதலிடத்தில் இருக்க வேண்டும் என வாழ்ந்து வரும் உங்களுக்கு ஆனி யோகமான மாதம். ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் ஆத்மகாரகனால் நெருக்கடி யாவும் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். உடல் நிலையில் இருந்த சங்கடம் தீரும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட போட்டி, பிரச்னைகள் முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். நினைத்த வேலைகளை நடத்திக் கொள்ளும் அளவிற்கு நிலை மாறும். சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை தன குடும்ப வாக்கு ஸ்தானத்திற்கு உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதியான சூழல் உருவாகும். பொருளாதார நிலை உயரும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். குடும்பத்தின் மீது அக்கறை அதிகரிக்கும். தொழிலில் கவனம் செல்லும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும். வழக்குகள் சாதகமாகும். எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.  மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். சிலருக்கு சொத்து சேரும். பொன், பொருள், நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். உடல்நிலையில் கவனமாக இருப்பது அவசியம்.

சந்திராஷ்டமம்: ஜூன் 29.

அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 19, 26, 28. ஜூலை 1, 8, 10.

பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வழிபட நன்மை உண்டாகும்.


திருவோணம்

எதிலும் தெளிவாக முடிவெடுக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி நன்மையான மாதம். தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சனி, ராகு சஞ்சரித்தாலும் ஞானக்காரகனின் பார்வை அங்கு உண்டாவதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல் சங்கடங்கள் விலகும். உங்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு புதிய இடம், வீடு வாங்கும் வகையில் செலவு ஏற்படும். தொழிலில் கூடுதல் அக்கறை உண்டாகும். சிலர் தொழிலை விரிவு செய்வீர்கள். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல தகவல் வரும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். ஆத்ம காரகன் சூரியன் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் சங்கடத்திலும் ஒரு நன்மை உண்டாவது போல் உங்கள் நிலையில் இக்காலத்தில் நன்மை அதிகரிக்கும். வம்பு, வழக்குகள், பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிரி தொல்லை விலகும். அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாயும், கேதுவும் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சங்கடம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். சிலர் அவமானத்தை சந்திக்க நேரும். வாகனத்தை இயக்கும் போதும், இயந்திரப்பணியில் இருக்கும் போதும் கவனமாக செயல்படுவது அவசியம். சிலருக்கு ஒவ்வாமை, தொற்று  ஏற்பட வாய்ப்புண்டு.  குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பெண்களுக்கு ஏற்பட்ட தொல்லை விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பணப்புழக்கம் இருக்கும். 

சந்திராஷ்டமம்: ஜூன் 30.

அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 20, 26, 29. ஜூலை 2, 8, 11.

பரிகாரம்: பைரவரை வழிபட உடல்நிலை சீராகும்.


அவிட்டம் 1, 2 ம் பாதம்

எடுத்த வேலைகளை முடிக்கும் திறமை கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். தைரிய வீரிய காரனான செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் கேதுவுடன் இணைந்து சஞ்சரிப்பதால் எதிர்பாராத சங்கடம், நெருக்கடி ஏற்படும். உடல் நிலையில் பாதிப்பு உண்டாகும். கடன் தொல்லை அதிகரிக்கும். வீண் பிரச்னைகள், வழக்குகள் உண்டாகும். ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்களைப் பாதுகாப்பார். அரசு வழி முயற்சிகளை சாதகமாக்குவார். வியாபாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். எதிர்ப்பு போட்டி என்றிருந்த நிலைகளை மாற்றுவார். பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை,  பாதிப்பு,  வழக்குகளை இல்லாமல் செய்வார். சங்கடத்தோடு வாழ்ந்தவர்களையும் நிமிர்ந்து நடை போட வைப்பார். இந்த நேரத்தில் புதனின் சஞ்சாரம் ஜூன் 22 வரை சாதகமாக இருப்பதால் புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். நினைத்ததை நடத்திக் கொள்ள முடியும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். மாதம் முழுவதும் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேரும். பணவரவு அதிகரிக்கும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். உறவினர் ஒத்துழைப்பால் உங்கள் வேலைகள் முடியும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். மாணவர்களுக்கு படிப்பில் ஏற்பட்ட தடை விலகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: ஜூலை 1.

அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 18, 26, 27. ஜூலை 8, 9.

பரிகாரம்: வீரபத்திரரை வழிபட சங்கடங்கள் விலகும்.

 
மேலும் பங்குனி ராசி பலன் (15.3.2026 முதல் 13.4.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினி: வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்ந்து, அனைத்தையும் எதிர்கொண்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் முதன்மையானவரான உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்சிந்தித்து செயல்படுவதுடன் மற்றவர்களை வழிநடத்தும் திறமையும் கொண்ட உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மகம்விடா முயற்சியுடன் தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டுவரும் உங்களுக்கும் பிறக்கும் பங்குனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar