கும்பாபிஷேக யாகசாலை பூஜையில் வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி
பதிவு செய்த நாள்
07
ஜூலை 2025 01:07
வல்லக்கோட்டை சுப்பிரமணிய பூஜைகள் கடந்த மாதம் 30ல் துவங்கியது. வல்லக்கோட்டை சுப்பிரமணியசு வாமி கோவிலில் இன்று நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த மாதம் 30ம் தேதி யாகசாலை பூஜை துவங்கியது. முதல் நாளான அன்று காலை 10:00 மணிக்கு தேவதா அனுக்ஞை, யஜமான சங்கல்பம், ஆச்சார்யா வர்ணம், கிராம தேவதை வழிபாடு, மங்கல இசை உள்ளிட்டவை. இரண்டாம் நாளான ஜூலை 1ம் தேதி காலை 8:00 மணிக்கு மஹா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமமும், மாலை 5:00 மணிக்கு ம்ருத் ஸங்கிரஹணம், கிராம சாந்தி நடந்தது. மூன்றாம் நாளான ஜூலை 2ம் தேதி காலை 7:00 மணிக்கு சாந்தி ஹோமம், திசா ஹோமம், மூர்த்தி ஹோமம். சம்ஹிதா ஹோமமும், இரவு 7:00 மணிக்கு பிரவேசபலி நடந்தது. நான்காம் நாளான ஜூலை 3ம் தேதி காலை 9:00 மணிக்கு சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம், பிரதான ஆச்சார்ய தச வித ஸ்நாநமும், மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், பிரதான ஆச்சார்ய ரக்ஷாபந்தனம் நடந்தது. ஐந்தாம் நாளான ஜூலை 4ம் தேதி காலை 9:00 மணிக்கு தீர்த்தசங்க்ரஹ ணம், அக்னி சங்க்ரஹணம், யாகசாலை அலங்காரமும், மாலை 4:00 மணிக்கு ரித்விஜர் ரக்ஷாபந்தனம், விசேஷசந்தி, மண்டபார்ச்சனை, கும்பாலங்காரம் கலார்கர்ஷணம், யாத்ரா ஹோமம், க்ஷண ஹோமம், யாத்ராதானம், கிரகப்ரீத்தி, யாகசாலை பிரவேசம், முதல் கால யாகபூஜை, த்ரவ்யாஹூதி, முதல் கால பூர்ணாஹூதி, தீபாராதனையும் தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டது. ஆறாம் நாளான நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, ஷடத்வந்யாசம், த்ரவ்யா ஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனையும், மாலை 4:30 மணிக்கு மூன்றாம் கால யாகபூஜை, கோலகந்யாசம், த்ரவ்யா ஹுதி, பூர்ணாஹுதி, தீபாராதனை உள்ளிட்டவை நடந்தது. ஏழாம் நாளான நேற்று காலை 8:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, ஸ்ரீகண்டந்யாசம், விசேஷ ஷண்ணவதி ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை யும், மாலை 4:00 மணிக்கு ஐந்தாம் கால யாக பூஜை, பிம்பகத்தி, 108 கலச ஸ்நபனாபிஷேகம், ரக்ஷாபந்தனம், தத்வார்ச்சனை, நாடிசந்தானம், ஸ்பர் ஸாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.
|