பக்தர்கள் கேட்கும் வரங்களை அள்ளித்தரும் 6 விரல்களுடன் திரிபுரசுந்தரி அம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2025 01:07
கடந்த 1983-ல் சென்னையை சேர்ந்த அரசு உயர்அ திகாரியின் மனைவி தனது வீட்டில் உள்ள சிறிய கோவிலில் அம் மன் சிலையை வைத்து பொதுமக்களுக்கு இலவ சமாக அருள்வாக்கு கூறிவந்தார். இந்நிலையில், அருள் வாக்கில் வந்த அம்மன், தனக்கு இங்கு இருப்ப தைவிட ஸ்ரீபெரும்புதுார் அடுத்த வல்லக்கோட் டையில் தனது பாலகன் உள்ள சுப்பிரமணியசு வாமி கோவிலில் உள்ள வேப்பமரத்தடியில் அரு கில் தன்னை பிரதிஷ்டை செய்யுமாறு கூறியுள்ளார். அதன்படி இக்கோவிலில் அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
காஞ்சி சங்கரமடத் தின் மஹா பெரியவா என அழைக்கப்படும் சங்கராச்சாரியார் சந்தி ரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிபட்டு, திரிபுரசுந்தரி என திருநா மம் சூட்டப்பட்ட இந்த அம்மன் கையில் ஆறு விரல்களுடன் பக்தர்கள் கேட்டவரத்தை அள்ளித் தருகிறாள். ஆறு விரல்கள் கொண்ட அதிசய அட்சய பாத்திரமாக திரிபுரசுந்தரி அம்மன் அருள்பாலித்து வருவது இங்கு மட்டுமே. திருமணம், குழந்தை பேறு உள்ளிட்ட எந்த வித வேண்டுதலையும் அம்மன் சன்னிதியில் அமர்ந்து, பக்தியுடன் வேண்டினால், குறைகள் நிவர்த்தி அடைவதாக பக் தர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், ஒவ் வொரு மாதமும் கிருத் திகை அன்று திரிபுரசுந்தரி அம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்படுகிறது. அம்மனுக்கு ஆடிப் பூரம், நவராத்திரி உள் ளிட்ட உற்சவம் நடத்தப் பட்டு வருகிறது. அம்மன் சன்னிதியில் கண்களை மூடி வேண் டினால், மனம் அமை திபெற்று, நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இன்றும் உள்ளது.