சித்திரை 3, 4: நினைத்ததை சாதிக்கும் வரை முயற்சியை கைவிடாத உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் முன்னேற்றமான மாதமாகும். தைரிய வீரிய காரகனான செவ்வாய் ஜூலை 30 வரை லாப ஸ்தானத்தில், ஞான மோட்சக் காரகனுடன் இணைந்து சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். விற்பனை அதிகரிக்கும். வருமானம் உயரும். சிலருக்கு இழுபறியாக இருந்த ஒப்பந்தம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றியாகும். ஜூலை 30 முதல் செவ்வாய் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து செலவுகளை உண்டாக்கினாலும் மாதம் முழுவதும் கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருவாயில் தடை இருக்காது. தட்டுப்பாடு இல்லாமல் கையில் பணம் புரளும். நினைத்த வேலைகள் நடந்தேறும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை இருக்கும். உங்களுக்கு லாபாதிபதியான சூரியன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அரசுவழி முயற்சிகள் வெற்றியாகும். வேலை தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வெளிநாடு செல்வதற்காக எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம், தொழிலை விரிவு செய்வீர்கள். சிலருக்கு மாதத்தின் பிற்பகுதியில் புதிய சொத்து சேரும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். விவசாயிகள் மேற்கொள்ளும் முயற்சி லாபம் தரும்.
சுவாதி: முன்னேற்றப் பாதையில் நடை போடும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் நன்மையான மாதம். யோகக்காரகன் ராகு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், அவருக்கு குருவின் பார்வை கிடைப்பதால் உங்கள் கனவுகள் நனவாகும். இதுவரை இருந்த நெருக்கடிகள், ஏற்பட்ட அவமானங்கள் விலகும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்த குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட வழக்குகள் சாதகமாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு பெரியோரின் ஆதரவு கிடைக்கும். பாக்கிய ஸ்தான குரு வரவை அதிகரிப்பார். நீண்டநாள் கனவுகளை நனவாக்குவார். வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம், செல்வாக்கு, பட்டம், பதவி என கனவுகள் நனவாகும். சமூகத்தில் அந்தஸ்தும், மரியாதையும் கூடும். உடல் பாதிப்பு விலகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். ஆக. 8 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரம் தொழிலுக்காக கேட்டிருந்த பணம் வரும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த சங்கடங்கள், குழப்பங்கள் விலகும். பொருளாதார நிலை உயரும். நீண்ட காலமாக நிறைவேற்ற முடியாமல் இருந்த குலதெய்வ வழிபாட்டை நிறைவேற்றுவீர்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். செலவிற்கேற்ற வரவு வரும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வர். எதிர்காலம் பற்றிய அக்கறை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 21, 22.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை. 24, 31. ஆக. 4, 6, 13, 15.
பரிகாரம்: குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.
விசாகம் 1, 2, 3: பிறருக்கு வழிகாட்டியாகவும் சமூகத்தில் அந்தஸ்து மிக்கவராகவும் வாழும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் யோகமான மாதமாகும். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். அலட்சியமாக உங்களைப் பார்த்தவர்களும் ஆச்சரியமாக பார்க்கும் நிலையினை ஏற்படுத்துவார். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வசதி வாய்ப்பு கூடும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். சகோதரர்களின் ஒத்துழைப்பால் முயற்சி வெற்றியாகும். லாப ஸ்தானம் பலமடைவதால் பொருளாதார நிலை உயரும். பிறருக்கு உதவி செய்திடும் அளவிற்கு உங்கள் நிலை மாறும். ஆக.8 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய முயற்சி வெற்றியாகும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வாங்க நினைத்த சொத்தை வாங்குவீர்கள். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். வேலைக்காக வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். அதிர்ஷ்டக்காரகனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பணவரவில் இருந்த தடை விலகும். பொன், பொருள் சேரும். வியாபாரிகளுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களின் நிலை உயரும். சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். விவசாயிகளுக்கு நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 22
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 21, 24, 30. ஆக. 3, 6, 12, 15
பரிகாரம்: குருபகவானை வழிபட நன்மைகள் நடந்தேறும்.
மேலும்
ஆடி ராசி பலன் (17.7.2025 முதல் 16.8.2025 வரை) »